இந்தியன் 2 படத்துக்காக வடசென்னையில் பிரமாண்ட ஓவியங்கள்
Indian 2 Shooting Update : சென்ற வாரம் கேம் சேஞ்சர் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்ததைத் தொடர்ந்து, இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு வடசென்னையில் நடக்கிறது.
Indian 2 Update : இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சிகளுக்காக திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு சுவர்களில் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தின் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்தியன் 2 திரைப்படம்:
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 (Indian 2) திரைப்படம். இந்த படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இதுவரை படத்தின் போஸ்டர்களும், அவ்வப்போது சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அதை தவிர்த்து படம் குறித்த எந்த அப்டேட்களையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது.
இந்தியன் 2 டிஜிட்டல் உரிமை :
இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT நிறுவனமான நெட்ஃபிக்ஸ் பரபரப்பான விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோலிவுட்டில் அனைவரும் மிக ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இந்தியன் 2 ஆகும். தற்போது இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியன் 2 ரிலீஸ் எப்போது :
இதனிடையே இந்தியன் 2 திரைபடம் மே 16 அல்லது 30ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது வரை இது தொடர்பான எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவில்லை, கூடிய விரைவில் அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடசென்னையில் பிரமாண்ட ஓவியங்கள்:
இந்நிலையில் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், ஒரு பாடல் மட்டும் மீதம் உள்ளதால், அதன் பணிகள் விறுவிறுப்பாக சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில், இந்தியன் தாத்தாவைக் கொண்டாடும் வகையிலான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தியன் வெளியான போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றியை பெற்றது. அதுபோன்ற வெற்றியை இந்தியன் 2 படமும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ