லண்டன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிரபாஸ்! இவ்வளவு பெரிய ஸ்டாருக்கு இப்படியொரு நிலைமையா..

Prabhas House In London: தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், பிரபாஸ். இவர், தற்போது லண்டனில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளது. 

Prabhas House In London: இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், பிரபாஸ். தென்னிந்திய திரையுலகில் பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். பாகுபலி படம் மூலம் உலகம் முழுவது அறியப்பட்ட இவர், அந்த படத்திற்கு பிறகு கமிட் ஆகும் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் படமாகவே இருக்கிறது. தற்போது அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார், பிரபாஸ். இந்த நிலையில், இவர் தற்போது லண்டனில் ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீட்டின் ஒரு மாத வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா? 

1 /7

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், பிரபாஸ். இவரை ரசிகர்கள் செல்லமாக ரிபஸ் ஸ்டார் என்று அழைப்பர். திரையுலகிற்கு வந்த நாளிலிருந்து, பிரபாஸ் ஆக்‌ஷன் படங்களில்தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல கமர்ஷியல் திரைப்படங்கள் மாபெரும் வசூலை குவித்துள்ளன. 

2 /7

பிரபாஸ், 2015ஆம் ஆண்டில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் நடித்தார். மிகப்பெரும் பட்ஜெட்டில் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து, இவர் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

3 /7

பிரபாஸிற்கு, கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். குறிப்பாக, ஐதராபாத், தெலங்கானா ஆகிய பகுதிகளில் இவர் வெளியிலேயே நடமாட முடியாது. அந்த அளைவிற்கு இவருக்கு ரசிகர்கள் தொல்லை கொடுக்கின்றனர். இஅவர் மட்டுமல்ல, பிரபலமான ஹீரோக்கள் அனைவருமே இந்த பிரச்சனையை சமாளித்து வருகின்றனர். இதை சமாளிக்க, சிலர், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பரப்பதுண்டு. 

4 /7

அந்த வகையில், நடிகர் பிரபாஸும் லண்டன் போய் அடிக்கடி தங்கி வருவதாக கூறப்படுகிறது. இவர், லண்டனில் ஒரு வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

5 /7

பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான பிரபாஸ், லண்டனில் சொந்தமாக வீடு வாங்காமல் வாடைகைக்குதான் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீட்டிற்கு, மாதம் ரூ.60 லட்சம் வாடகை என்றும் கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், பிரபாஸ் ஏன் சொந்தமாக வீடு வாங்கவில்லை என்று குழம்பி வருகின்றனர். 

6 /7

பிரபாஸ் இத்தாலியில் சொந்தமாக வீடு வாங்கி வைத்திருப்பதாகவும் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு வைத்திருப்பதாகவும் முன்னர் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர், ஒரு படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

7 /7

பிரபாஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு, சலார்- பாகம் 1 சீஸ் ஃபயர் படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு இவர், ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருக்கிறார்.