சென்னை: விரைவில் நடிகை நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார் கொடுப்பேன் எனக்கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "நானும் ரவுடிதான்". இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள் என்றும், இவர்களது ஐந்து வருட காதல், இந்தவருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடி கோவாவுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் சிம்புவுடன் காதல், பிறகு பிரபுதேவாவுடன் நெருக்கம், தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் என அவரது காதல் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், பிரபுதேவாவுக்கு அடுத்து, விக்னேஷ் சிவனுக்கும் முன்னாள் பிரபல நடிகரும் அரசியல் பிரபலமான உதயநிதி ஸ்டாலினுடன் நயன்தாராவுக்கு ஒரு கனெக்சன் இருந்தது என பிரபல அரசியல்வாதியும், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவரும் பொதுமேடையில் அநாகரிகமான முறையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



ALSO READ | ரொமான்ஸ் மூடில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா... இணையத்தை அலரவிடும் புகைப்படம்!


தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர இருப்பதால் உதயநிதி ஸ்டாலின் முழு மூச்சாக கலத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். மேலும், ஆளும் கட்சியினர் உதயநிதி ஸ்டாலினை வாய்க்கு வந்தபடி பேசி வருவதையும் ஊடகங்கள் மூலம் பார்க்க முடிகிறது. உதயநிதி ஸ்டாலினும் அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார். 



இதற்கிடையில், ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் நயன்தாரா உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார் கொடுக்கவுள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தொடர்ந்து சில படங்களில் நடித்தபோது இருவருக்கும் கிசு கிசு என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இது கதிர்வேலன் காதல் மற்றும் நண்பேன்டா ஆகிய படங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து இருவரும் நடித்தனர்.



அப்போதே இருவருக்குள்ளும் உறவு இருப்பதாக அரையும் குறையுமாக செய்தி வந்த நிலையில், தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுப்படையாக கூறியுள்ளதால் இருவருக்கும் உறவு இருந்தது உறுதியாகி விட்டது என்கின்றனர் சினிமா வாசிகள். சாதாரண மனிதர்களாக இருக்கும் நமக்கே சுய வாழ்கையில் பல காதல் கதைகள் இருக்கிறது. பிரபலங்கள் மட்டும் என்ன விதி விளக்கா. ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிப்பது சரியானதா எனக் கேட்டால், அது தவறுதான்.