தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இளைஞர்கள் மத்தியில் மவுசு கூடி வருகிறது.  இவரது அடுத்த படங்கள் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் அதிகரித்து வருகிறது.  கடந்த 2021ம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது, இந்த மாபெரும் ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜும் நடிகர் விஜய்யும் இணையவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தை வட்டமடித்துக்கொண்டே இருக்கின்றனர்.  விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் அமையவுள்ளதாக கூறப்படும் 'தளபதி-67' படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக லேட்டஸ்டாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மேனேஜரால்தான் சூர்யாவுக்கு தேசிய விருதா?... சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை


பஹத் பாசில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்.  சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது, இந்த படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தில் இவரது மிரட்டலான நடிப்பு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் சர்ப்ரைஸாக பஹத் பாசிலுக்கு வீடியோ கால் செய்து பேசியபொழுது, இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்டனர்.  அப்போது இயக்குனர் லோகேஷிடமும், நடிகர் பஹத் பாசிலிடமும் இருவரும் மீண்டும் எப்போது இணைவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு இருவரும் சற்றும் தாமதிக்காமல் விரைவில் இணைவோம் என்று பதிலளித்துள்ளனர்.



இதனை வைத்து பார்க்கும்பொழுது விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் தான் பஹத் பாசில் நடிக்கப்போகிறார் என்று கருதப்படுகிறது.  'தளபதி 67' படத்தை லோகேஷ் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, பஹத் 'விக்ரம்' படத்தில் அமர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததை போன்று 'தளபதி 67' படத்திலும் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுகுறித்த அதிகாரபூர்வ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது.  தளபதி 67 படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ