Actor Mayilsamy Passed Away: சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி (57). இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு, முன்பாக தனது குரல் வளத்தால் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி மிமிக்ரி செய்து பிரபலமானவர். தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து உச்சம் தொட்டவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலுகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர், நடிகர் மயில்சாமி. 1984-இல் பாக்கியராஜின் தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது சொந்த ஊர் சத்தியமங்கலம். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.


சிவராத்திரியில் வழிபாட்டுக்கு பின் உயிரிழப்பு


தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். முன்னதாக, மயில்சாமி நேற்று இரவு கடைசியாக கேளம்பாக்கம் மேகநாதீஷ்வரர் சிவன் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு, பக்தி பாடல்களை பாடி வழிபாடு செய்துள்ளார். இதன் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. வழிபாட்டை முடித்துவிட்டு, அதிகாலையில் அவர் வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 



மாரடைப்பு


பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே மயில்சாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி உயிரிழந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது என முதலில் தகவல் வெளியான நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவில்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரது உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட உள்ளது. அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதியானது.


அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி பல்வேறு கூட்டங்களிலும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அனல் தெறிக்கும் தனது கருத்துக்களால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த காமெடி நடிகர் மயில்சாமி உயிரிழப்பு, தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


முதலமைச்சர் இரங்கல்


மயில்சாமி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில்,"பிரபல நகைச்சுவை நடிகர்‌ மயில்சாமி மறைந்தார்‌ என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன்‌. பல குரல்களில்‌ நகைச்சுவையாகப்‌ பேசும்‌ ஆற்றல்‌ படைத்த அவர்‌, தன்னுடைய ஒலிநாடாக்கள்‌ வழியாக தமிழ்நாடு முழுவதும்‌ அறிமுகமானவர்‌. 'காமெடி டைம்‌! நிகழ்ச்சியின்‌ மூலம்‌ தமிழ்நாட்டு மக்களின்‌ இல்லங்களில்‌ ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப்‌ பெற்றவர்‌. 



முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்‌ பாராட்டைப்‌ பெற்றவர்‌. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில்‌ தன்னுடைய கருத்துகளை ஆழமாகப்‌ பதிவு செய்யக்கூடியவர்‌. திரை உலகில்‌ தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால்‌ வாடும்‌ குடும்பத்தினர்க்கும்‌ திரையுலகக்‌ கலைஞர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌" என குறிப்பிட்டுள்ளார். 



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ