பிளாஸ்டிக் கிளாசில் அஜித் ஓவியம்! அசத்தும் ரசிகர்!
துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி, ஒரு அஜித் படத்தில் மூன்று அஜித் ஓவியம் வரைந்து ஓவியர் அசத்தியுள்ளார்.
வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் துணிவு. அஜித்தின் 61வது படமான துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது. பொதுவாக அஜித் படங்களின் அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகும் நிலையில் துணிவு படத்தில் அறிவிப்பு புதன்கிழமை மாலை வெளியானது. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கருணாஸ் நடித்துள்ள ஆதார் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம், நடிகர் அஜித்குமார் நடித்து வெளிவரும் "துணிவு" திரைப்படம் வெற்றி பெற வேண்டி இரண்டு யூஸ் அண்ட் த்ரோவ் கிளாஸில், ஒரு கிளாஸில் ஒரு அஜித் படம் வரைந்து பிறகு மற்றொரு கிளாசில் மூன்று திரைப்படங்களிலிருந்து ரெட் திரைப்படம் அஜித், வலிமை திரைப்படம் அஜித், தற்போது வெளிவர இருக்கும் துணிவு திரைப்பட அஜித் ஆகிய மூன்று அஜித் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தவுடன், அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக துணிவு படத்தினை இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாத காரணத்தினால் வேறு தேதிக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. தற்காலிகமாக அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே தினத்தில் விஜய்யின் வாரிசு படமும் வெளியாக இருப்பதால், இரண்டு படங்களும் மோதிக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | அதர்வா நடித்துள்ள ட்ரிக்கர் படத்தின் திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ