தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு உள்ளனர்.  பொது இடங்களில் பொது மக்கள் கூட்டமும் அதிகளவில் வர தொடக்கியுள்ளதால் இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.  ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இளையராஜா என அனைவரும் கான்செர்ட் நடத்தி அதில் வருமானம் பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையில் நேற்று சனிக்கிழமை, தனியார் யூட்யூப் சேனல் சார்பில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Bigg Boss போட்டியாளர்கள் இவர்கள் தான்! ஒரே வீட்டில் குடியிருக்கப் போகும் பிரபலங்கள்


கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரே சமயத்தில் பலர் முண்டியடித்து செல்ல முயன்றதால், 3 மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா கார் உள்ளே சென்ற போது, காரை ஏராளமானோர் துரத்தி சென்றதாகவும், தடுக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினாவை கீழே தள்ளி மிதித்தபடி மாணவர்கள் உள்ளே ஓடியதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அவருடன் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.