‘டக்கர்’ to ‘ஃபர்ஹானா’ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள மாஸ் திரைப்படங்கள்..!
OTT Releases This Week: இந்த வாரம், ஓடிடியில் திரை விருந்துக்காக பல படங்கள் காத்துக்கொண்டுள்ளன. அதில் பால தமிழ் படங்களும் உள்ளது. அந்த படங்களையும் அவை வெளியாகும் தளங்களையும் பார்க்கலாமா..?
‘திரைக்கு வந்து சில மாதங்களே ஆன..’ என நாம் தொலைக்காட்சிகளில் எப்போதோ திரைக்கு வந்த படங்களை பார்க்கும் காலம் மலையேறி விட்டது. தியேட்டரில் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. வாரா வாரம், பல படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வாரமும் மக்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்திருந்த படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
மேலும் படிக்க | பெற்ற மகளை ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..! வீடில்லாமல் ரோட்டில் திரியும் மகள்..!
பின்வரும் படங்கள் நாளை (ஜூலை 7) வெளியாகின்றன.
ஃபர்ஹானா-சோனி லைவ்:
ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம், ‘ஃபர்ஹானா’. வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண் பற்றிய கதை இது. திரைக்கு வந்த சில வாரங்கள் ஆன நிலையில், இப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை, சோனி லைவ் தளத்தில் நாளை முதல் (ஜூலை 7) காணலாம்.
டக்கர்-நெட்ஃப்ளிக்ஸ்:
சித்தார்த் நடிப்பில் வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற படம், டக்கர். இந்த படத்தில் திவ்யா கௌஷிக் நாயகியாக நடித்திருந்தார். இருவேறு வாழ்வியல் கொள்கைகளை கொண்டிருக்கும் இருவரும் காதலித்தால் எப்படியிருக்கும் என்பதே படத்தின் மையக்கரு. இந்த படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.
போர் தொழில்-சோனி லைவ்:
இளம் பெண்களை கடத்தில் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனையும் அவனை கண்டுபிடிக்க போராடும் இரண்டு காவல் அதிகாரிகளையும் குறித்த கதைதான் போர் தொழில். விக்னேஷ் சிவன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம், சோனி லைவ் தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம்-ஜீ 5:
ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த படம், காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம். இந்த படம், ரிலீஸாகி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. ‘வெந்து தணிந்தது காடு’ பட நாயகி இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்யா முதன்முறையாக கிராமத்து இளைஞன் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த அப்டம், நாளை ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.
ப்ளைண்ட்-ஜியோ சினிமா:
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பீல் வெளிவர உள்ள ப்டம், ப்ளைண்ட் (Blind). கொரியன் மொழியில் உருவாக்கப்பட்ட படத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இதன் தமிழ் ரீ-மேக்கிக்கான ‘நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம், திரையரங்கிற்கு செல்லாமல் நேரடியாக ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜியோ சினிமா தளத்தில் நாளை முதல் இப்படத்தை காணலாம்.
தி போப் எக்ஸார்சிஸ்ட்-நெட்ஃப்ளிக்ஸ்:
சில நாட்களுக்கு வெளியாகி பலரை பயமுறுத்திய பேய் படம் இது. ஒரு சிறுவனுக்குள் இருக்கும் ஆவியையும் அதனை விரட்ட வரும் சர்ச் பாஸ்டரையும் வைத்து சுழலும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சிலர், இந்த படத்தில் வரும் கதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என கூறுகின்றனர். ஆங்கில மொழியில் வெளியாகும் இப்படத்தினை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளைமுதல் காணலாம்.
அதுரா-அமேசான் ப்ரைம்:
ஒரு பள்ளியில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணமாக இருக்கும் ஒரு சிறுவனை சுற்றி சுழலும் கதை, அதுரா. இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் எக்கச்சக்க வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த தொடர், நாளை முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
பிற படங்கள்:
மேற்கூறியவை மட்டுமன்றி இன்னும் சில படங்களும் தொடர்களும் வெவ்வேறு ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
*டார்லா-இந்தி-ஜீ 5
*IB71-இந்தி-ஹாட்ஸ்டார்
*65Movie-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
*தி அவுட்லாஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
*கோல்ட் ப்ரிக்-ஃப்ரெஞ்சு-நெட்ஃப்ளிக்ஸ்
*தி மேஜிக் ஆஃப் ஸ்ரீ-இந்தி-ஜியோ சினிமா
*ஸ்வீட் காரம் காஃபி-தமிழ்-அமேசான் ப்ரைம்
*ஜானகி ஜானே-மலையாளம்-ஹாட்ஸ்டார் (ஜூலை 11)
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் மற்றும் ராம் சரண் திடீர் சந்திப்பு! லியோ படத்தில் கேமியோ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ