'போர் தொழில்' திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

Port Thozhil OTT Release: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போர் தொழில் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?  

Written by - Yuvashree | Last Updated : Jul 6, 2023, 06:26 AM IST
  • சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த படம், போர் தொழில்.
  • சைக்கோ த்ரில்லர் திரைப்படம்-ஓடிடியில் வெளியாகவுள்ளது.
  • எங்கு எப்போது பார்க்கலாம்? முழு விவரம் உள்ளே.
'போர் தொழில்' திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?  title=

சரத்குமார், அசோக் செல்வன் போன்ற பலர் நடித்து வெளிவந்த திரைப்படம், போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் கதை இது. இப்படம், ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அது என்ன தளம் தெரியுமா? 

த்ரில்லர் திரைப்படம்:

சமீபத்தில் வந்த த்ரில்லர் திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த படம், போர் தொழில். அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சரத்குமார், சுனில் சுகாதா ஆகிய இருவரும் வில்லனாக மிரட்டினர். நிகிலா விமல் கதையின் நாயகியாக வந்திருந்தார். படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 

ஓடிடி ரிலீஸ்:

போர் தொழில் திரைப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், இப்படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது. தமிழ் மட்டுமன்றி பல மொழில் படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பும் சோனி லிவ் தளத்தில் நாளை முதல் (ஜூலை 7) இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | ‘கொலை மிரட்டல் விடுக்கிறார்..’ தந்தை மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

முதல் படத்திலேயே முத்திரை:

‘போர் தொழில்’ படத்தை, விக்னேஷ் ராஜா என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார். இவர், தனது முதல் படத்திலேயே ‘நச்’சென முத்திரை பதிக்கும் விதமாக போர் தொழில் படத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது போல இன்னும் பல படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் இவரிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். ‘ராட்சசன்’படம் போன்ற உணர்வை, இந்த படம் அளித்ததாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். 

‘வேட்டையாடு விளையாடு’ படத்திலிந்து..

போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் படம் சம்பந்தமாக ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் போர் தொழில் படத்திற்கான ஐடியா எங்கிருந்து வந்தது என கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் வேட்டையாடு விளையாடு படத்தை பார்த்ததாகவும். அதில் வரும் கமல்ஹாசனின் காவலதிகாரியின் கதாபாத்திரம் தன்னை ஈர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த படத்தை பார்த்துதான் சைக்கோ கில்லர் கதை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்:

போர் தொழில் திரைப்படம் கிட்டத்தட்ட 21 நாட்களை கடந்த பிறகும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. படத்தின் முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் வரை வசூலித்திருந்தது. இரண்டாம் நாளில் சராசரியாக 1.60 கோடி வரை இப்படம் கலெக்ட் செய்துவிட்டது. படம் பார்த்த மக்கள் பாசிடிவான விமர்சனங்களை அளித்ததால், இப்படத்திற்கு மவுசு கூடியது. தற்போது வரை, இப்படம் 24.57 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

படத்தின் பட்ஜெட்:

பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனின் காசை அள்ளியுள்ள இப்படம், மிகவும் குறைவான படஜெட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ப்ரொடக்‌ஷன் செலவுகள், நடிகர்களின் சம்பளம் எல்லாம் சேர்த்து சுமார் 6 கோடி ரூபாய் செலவிலேயே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பெற்ற மகளை ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..! வீடில்லாமல் ரோட்டில் திரியும் மகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News