தாமதமாகும் அவதார் இரண்டாம் பாகம்..! அடுத்த தேதி என்ன? எப்பொழுது வெளியாகும்?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட தேதியில் அவதார் இரண்டாம் பாகத்தை வெளியிடுவது சாத்தியமில்லை என படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்களை கொண்ட "அவதார்" படத்தின் இரண்டாம் பாகம் சரியான நேரத்தில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும், ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் கேமரூன், நிச்சயமாக, ரசிகர்களின் காத்திருப்பு மதிப்புக்குரியதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார். "அவதார்" படத்தின் தொடர்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் "பூர்த்தி" செய்யப்படும் என்று கூறினார்.
கேமரூனின் "அவதார்" (Avatar) படத்தின் தொடர்ச்சியானது 2022 முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அவதார் படம் வெளியீட்டு தேதிகள்:
“அவதார் 2” டிசம்பர் 17, 2021 முதல் டிசம்பர் 16, 2022 க்கு மாற்றப்பட்டது;
அவதார் 3” டிசம்பர் 22, 2023 முதல் டிசம்பர் 20, 2024 வரை;
“அவதார் 4” டிசம்பர் 19, 2025 முதல் டிசம்பர் 18, 2026 வரை;
“அவதார் 5” டிசம்பர் 17, 2027 முதல் டிசம்பர் 22, 2028 வரை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலில் 2014 இல் திறக்க திட்டமிடப்பட்ட இரண்டாவது "அவதார்" தவணை, முதல் படம் வெளியான 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகமாகும்.
தற்போது நடைபெற்று வரும் கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய்க்கு மத்தியில் படத்தின் வெளியீடு தாமதமாக்கி உள்ளது என்று கேமரூன் தனது அதிகாரப்பூர்வ "அவதார்" இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோய் காரணமாக நியூசிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் "அவதார்" படத்தின் படப்பிடிப்பு எதிர்பாராத வகையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், படம் சொன்ன தேதிக்கு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் படத்தின் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதுவும் படம் தாமதத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
படம் தாமதத்தால் என்னை விட அதிகம் கவலைப்படுவோர் யாரும் இருக்க முடியாது. அதைவிட ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நீண்ட காலமாக நீங்கள் அளித்து வரும் ஆதரவு மற்றும் உங்கள் எதிர்பார்ப்புகளை, அவதார் படம் திரையரங்கில் வெளியிடும் போது :நன்றிக்கடன்" செலுத்துவோம் என ஜேம்ஸ் கேம்ரூன் கூறியுள்ளார்.