Filmfare Awards 2024 Full List Of Nominees List Animal Selected For 19 Categories: இந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விருது நிகழ்ச்சிகளுள் ஒன்று, ஃபிலிம் ஃபேர் விருதுகள். ஒரு ஆண்டில் வெளியான படங்களை தொகுத்து, அதில் ஒவ்வொரு பிரிவிற்கும் சில படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் பட்டியில் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள்..


இந்த ஆண்டு, 69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடக்கிறது. இம்மாதம் 28ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களும், நடிகர் நடிகைகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர். கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டின் தாெடக்கத்திலும் வெளியான பல படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளின் நாமினேட்டட் பட்டியலில் இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம். 


சிறந்த படத்திற்கான தேர்வுகள்:


>சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான ‘அனிமல்’.


>அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான்.


>ஷாருக்கானின் பதான்


>அக்‌ஷய் குமாரின் ஓஎம்ஜி 2


>ரன்வீர் சிங்-ஆலியா பட்டின் ராக்கி அவுர் ராண்இ கீ ப்ரேம் கஹானி


>12த் ஃபெயில்


சிறந்த இயக்குநர்:


>ஜவான் படத்திற்காக அட்லீ


>அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்கா


>பதான் படத்திற்காக சித்தார்த் ஆனந்த்


>12த் ஃபெயில் படத்திற்காக வித்து வினோத் சோப்ரா


>ஓஎம்ஜி 2 படத்திற்காக அமித் ராய்


>ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கதா படத்திற்காக கரண் ஜோஹர்


மேலும் படிக்க | கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் சம்பள விவரம்! அடடே..இத்தனை கோடியா?


சிறந்த படம்:விமர்சகர்கள் தேர்வு


>மேக்னா குலார்-சாம் பஹதூர் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


>வித்து வினோத் சோப்ரா, 12த் ஃபெயில் படத்திற்காக தேர்வு


>தேவஷிஷ் மகிஜா ஜோரம் படத்திற்காக தேர்வு


>அவினாஷ் அருன் தவாரே த்ரீ ஆஃப் அஸ் படத்திற்காக தேர்வு


>அனுபவ் சிங், பீத் படத்திற்காக தேர்வு


>ஹான்சல் மேதா ஃபராஸ் படத்திற்காக தேர்வு


>நந்தித்தா தாஸ், ஸ்விகாதோ படத்திற்காக தேர்வு. 


சிறந்த நடிகர் (ஆண்)


>டன்கி படத்திற்காக ஷாருக்கான்


>ஜவான் படத்திற்காக ஷாருக்கான்


>சாம் பகதூர் படத்திற்காக விக்கி கௌஷல் தேர்வு


>அனிமல் படத்திற்காக ரன்பீர் கபூர் தேர்வு


>காதார் 2 படத்திற்காக சன்னி டியோல் தேர்வு


>ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி படத்திற்காக ரன்வீர் சிங் தேர்வு


சிறந்த நடிகர் (பெண்)


>பதான் படத்திற்காக தீபிகா படுகோன்


>ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கஹானி-ஆலியா பட்


>சத்யப்ரேம் கீ கதா-கியாரா அத்வானி


>டன்கி படத்திற்காக டாப்சி பன்னு தேர்வு


>மிஸ்ஸர்ஸ் சாட்டர்ஜி வர்சஸ் நார்வே-ராணி முகர்ஜி


>தேங்க்யூ ஃபார் கம்மிங்-பூமி பேட்னேகர் 


அனிமல் படம் தேர்வு..


ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்த அனிமல் திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்பட 19 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது. 


தமிழ் படம் இருக்கிறதா? 


இந்த விருது பட்டியலில் தமிழ் பட இயக்குநர் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தை தவிர வேறு எந்த தமிழ் படங்களும் இல்லை. அட்லீ படம் கூட இந்தியில் எடுக்கப்பட்டு தமிழ் டப்பிங்கிள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தினேஷ்-ரச்சிதா பிரிவிற்கு காரணம் இதுதானா? ரச்சிதாவே போட்ட பதிவு..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ