பாலிவுட் நடிகருக்கு ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்த ராஷ்மிகா..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

Rashmika Mandanna Ranbir Kapoor: தென்னந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா, அனிமல் எனும் இந்தி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 12, 2023, 01:23 PM IST
  • ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம், அனிமல்.
  • இப்படத்தின் காதல் பாடல் ஒன்று வெளியானது.
  • அதில், ராஷ்மிகா ரன்பீருக்கு முத்தம் கொடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
பாலிவுட் நடிகருக்கு ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்த ராஷ்மிகா..! ரசிகர்கள் அதிர்ச்சி..!  title=

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர்-தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம், அனிமல் இப்படத்தின் ரொமான்டிக் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. 

அனிமல் திரைப்படம்:

2017ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படம், அர்ஜூன் ரெட்டி. இப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார். இவரது அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது, அனிமல். இதில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

காதல் பாடல்..

இந்தி மொழியில் உருவாகியுள்ள அனிமல் திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதில், ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவை சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் பெண்ணாக நடித்துள்ளார். ரன்பீர்-ராஷ்மிகாவிற்கு இடையே நடக்கும் ரொமான்ஸின் போது வரும் காதல் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

லிப்லாக் பாடல்..

அனிமல் படத்தில் இடம் பெற்றுள்ள அந்த காதல் பாடல், “ஹுவா மெயின்” என்ற பெயரில் இந்தியில் உருவாகியுள்ளது. இதன் தமிழ் ரீ-மேக்கிற்கு “நீ வாடி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ராஷ்மிகாவும் ரன்பீரும் அனைவர் முன்னிலையிலும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்துக்கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. அது மட்டுமன்றி, இருவரும் விமானம் ஓட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், “அப்போ விஜய் தேவரகொண்டா பாவம் இல்லையா..” என்று கமெண்ட் அடுத்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனர இதுவரை விஜய் தேவரகொண்டாவுடன் மட்டும்தான் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பார்ட்! 99 ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம்!

அனிமல் படத்தின் கதை:

அனிமல் படத்தில், அப்பாவால் அடித்து சித்தரவதை செய்யப்பட்ட மகன், கேங்க்ஸ்டராக மாறி, பின்பு சைக்கோவாக மாறுவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஹீரோ ரன்பீர் கபூருக்கு தந்தையாக அனில் கபூர் நடித்துள்ளார். டிரைலரில் காண்பித்த காட்சிகளின் படி, கண்டிப்பான தந்தையால் பணக்கார குடும்பத்தில் வளரும் ஹீரோ, வளர்ந்த பின்பு கொள்ளை கூட்டத்தின் தலைவனாக மாற்றப்படுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடைசியில் ஹீரோ, போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. இதனால், படத்தின் இறுதியில் ரன்பீர் கபூர் இறந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

இயக்குநரை பற்றி…

அர்ஜூன் ரெட்டி படத்தை இன்றளவிற்கும் ரசிகர்கள் பலர் கொண்டாடி வந்தாலும், அப்படத்தின் கதை மீது பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. காதல்-காமம் என்ற பெயரில் காதலியை அடிப்பது, டாக்ஸிக் உறவுகளை மகிமைப்படுத்தி பேசுவது போன்ற பல விஷயங்கள் இவரது கதையில் குறைகளாக பார்க்கப்படுகின்றன. மேலும், அனிமல் படத்திலும் இது போன்ற விஷயங்களை இடம் பிடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படத்தை T-Seiries மற்றும் Cine-1 Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. படம், வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | திருப்பதியில் லோகேஷ் கனகராஜ்! நண்பர்களுடன் சுவாமி தரிசனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News