தினேஷ்-ரச்சிதா பிரிவிற்கு காரணம் இதுதானா? ரச்சிதாவே போட்ட பதிவு..

சின்னத்திரை நடிகர்களான ரச்சிதாவும் பிரிந்து வாழ்வதை தொடர்ந்து, அதற்கான காரணம் குறித்து மறைமுகமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Jan 15, 2024, 08:08 PM IST
  • தினேஷ்-ரச்சிதா 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
  • இவர்கள் பிரிவிற்கு காரணம் என்ன?
  • முழு விவரம் இங்கே.
தினேஷ்-ரச்சிதா பிரிவிற்கு காரணம் இதுதானா? ரச்சிதாவே போட்ட பதிவு.. title=

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் டாப் 5 இறுதி போட்டியாளர்களுள் ஒருவராக வந்தவர், தினேஷ். இவரது மனைவி ரச்சிதா தாங்கள் பிரிந்து இருப்பதற்கான காரணம் குறித்து ரச்சிதா மறைமுகமாக பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கிய தினேஷ்..

நடிகர் தினேஷ், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் 7 போட்டியில், 22 போட்டியாளர்கள் களமிறங்கினர். இந்த போட்டி தொடங்கிய 28 நாட்கள் கழித்து இதனுள் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கியவர், தினேஷ். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்காெள்ள மறுத்த பிக்பாஸ் போட்டியாளர்கள், அடுத்தடுத்த வாரங்களில் இவருக்கு டஃப் கொடுத்து விளையாடினர்.

பிக்பாஸ் போட்டிக்குள் தினேஷ் நுழைய காரணம்..

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் அனைவரிடமுமே எதற்காக இந்த போட்டிக்குள் நுழைந்தீர்கள் என்று கேட்கப்பட்டது. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் கூற, தினேஷ் கூறிய காரணம் பலரையும் ஈர்த்தது. இவர், தன்னை விட்டு பிரிந்து போன ஒருவரை மகிழ்விப்பதற்காகவும், அவரிடம் வெற்றியுடன் நிற்க வேண்டும் என்பதற்காகவும்  இப்போட்டிக்குள் நுழைவதாக கூறினார். 

மேலும் படிக்க | மலைக்க வைக்கும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு! அட..இவ்வளவு பெரிய பணக்காரரா?

பிக்பாஸ் போட்டியில் வென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, உடனே பெங்களூருவிற்கு சென்று அவரை சந்தித்து பேசுவேன் என்று கூறினார். ரச்சிதா பெங்களூருவில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினேஷ் குறித்து ரச்சிதா போட்ட பதிவு..

தினேஷ், பிக்பாஸ் சீசன் 7ல் இருந்த ஒவ்வொரு நாளின் போதும் தான் போட்டி முடிந்தவுடன் கண்டிப்பாக ரச்சிதாவை சந்திப்பதாக கூறினார். மேலும் முடிந்து போன திருமண வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார். இவர், ஒவ்வொரு முறை ரச்சிதா குறித்து மறைமுகமாக பேசிய போதும், ரச்சிதா தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் தினேஷை தாக்கும் வகையிலேயே பல பதிவுகளை வெளியிட்டு வந்திருந்தார். அப்படி ஒரு எபிசோடில் அவர் ரச்சிதாகவை போட்டி முடிந்தவுடன் பார்ப்பதாக உறுதியாக தெரிவித்தார். 

இதற்கு ரச்சிதா, நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் ஒரு டைலாக்கை தனது ஸ்டோரியில் வைத்திருந்தார். “தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், கர்ள் ஃப்ரண்டா இருந்தாலும், லவ்வரா இருந்தாலும், செக்ஸ் வர்கரா இருந்தாலும், ஏன் மனைவியா இருந்தாலும் அவங்க நோ சொன்னா நோதான்” என்ற அந்த டைலாக்கை பதிவிட்டிருந்தார். அதனுடன் “புரிஞ்சா சரி” என்று குறிப்பிட்டிருந்தார். 

தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த ரச்சிதா..

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ரச்சிதா தனது முன்னாள் கணவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், அவர் தனக்கு தினேஷ் மிரட்டல் விடும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்புவதாக தெரிவித்திருந்தார். 

காதல்-திருமணம்-பிரிவு..

ரச்சிதா, 2008ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த தொடர் மூலம் இருவரும் அறிமுகம் ஆனதை அடுத்து ரச்சிதாவிற்கு சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டு மற்றும் மூன்றாம் சீசன்களில் மீனாட்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், அவருக்கும் தினேஷிற்கும் 2015ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய இந்த திருமணம், கடைசியில் விவாகரத்தில் முடிந்தது. 

மேலும் படிக்க | டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு கொடுக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News