இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்த லியோ படம் வெளியானது.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  மேலும் இந்த படம் எல்சியு-வின் ஒரு பகுதியாக இருந்தது. விஜய் முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார், இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், ஜார்ஜ் மேரியன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எதிர்காலத்தில் லியோ படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


ரசிகர்களும், விமர்சகர்களும் லியோ படத்தை பாராட்டினாலும் படத்தின் இரண்டாம் பாகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாக சிலர் கூறினர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாதம் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.  இதற்கு ஜி ஸ்குவாட் என்று பெயர் வைத்துள்ளார்.  முதலில் தனது நண்பர்களுக்கும், துணை இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதல் படமாக உரியடி விஜயகுமார் நடித்துள்ள ஃபைட் கிளப் படத்தை வெளியிடுகிறார்.  



இதற்காக கொடுத்த பேட்டி லியோ படம் குறித்து கேட்கப்பட்ட போது சில பதில்களை முன் வைத்தார் லொகேஷன். அதில் லியோ படத்தில் இரண்டாம் பாகத்தில் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறுகின்றன,ர் நான் அதை ஏற்று கொள்கிறேன். மேலும் இனி ரிலீஸ் தேதி சொல்லிவிட்டு படப்பிடிப்பிற்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். ஏனெனில் ஒரு மிகப்பெரிய படத்தை பத்து மாதங்களில் முடிப்பது மிகவும் கடினமான ஒன்று, அதை இனி பண்ண மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.  லோகேஷ் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து அவரது 171 வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினி ஒரு நெகட்டிவ் ரோலில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், காக்க காக புகழ் ஜீவா போன்றோர் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.  மேலும், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் மூலக் கதையை சொல்லும் 10 நிமிட குறும்படத்தை அவரும் லோகேஷும் தயாரித்துள்ளதாக LCU-வில் பிஜாய் வேடத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் நரேன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.  விரைவில் இந்த குறும்படம் நெட்பிளிக்ட்ஸில் வெளியாக உள்ளது.


மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து தப்பிக்க முயன்ற முக்கிய போட்டியாளர்! பிறகு நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ