ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Redin Kingsley Net Worth: பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு விவரம்: சீரியல் நடிகை சங்கீதாவை மைசூரில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ள பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

 

1 /6

ரெடின் கிங்ஸ்லி திரையுல பயணம்: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி, 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். திரையுலகில் ஒரு டான்சராக தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், 1998 ஆம் ஆண்டு 'அவள் வருவாளா' படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பார்ர்.  

2 /6

ஒருங்கிணைப்பு பணி: தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரிடம் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் கோடி கணக்கில் இவர் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.  

3 /6

ரெடின் கிங்ஸ்லி படங்கள்: LKG, A1, ஜாக்பாட், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், ஜெயில,ர் டிடி ரிட்டன்ஸ், போன்ற முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.  

4 /6

ரெடின் கிங்ஸ்லி 2023 ஆம் ஆண்டு படங்கள்: 2023 ஆம் ஆண்டில் மட்டும், இவர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்திலும் நடித்திருந்தார்.  

5 /6

ரெடின் கிங்ஸ்லி திருமணம்: 46 வயதில் ரெடின் கிங்ஸ்லி, சீரியல்களில் நடித்து பிரபலமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.  

6 /6

ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு: ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு சுமார் 40 முதல் 50 கோடி வரை இருக்கும். மேலும் இவரிடம் பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.