‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ மோஷன் போஸ்டர் வெளியீடு
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நிஹாரிகா, ரமேஷ் திலக் உடன் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் வெளியாகி தற்போது வைராலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி எமன் போன்ற தோற்றத்துடன் கையில் அறுவாளுடன் நிற்கிறார். கெளதம் கார்த்திக் மாடர்ன் இளைஞராக போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் இப்படத்தின் இசை விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.