"பிகில்" படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் (Vijay) நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 64’. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (டிசம்பர் 31) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது..



இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றும் திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்பு கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய "கைதி" பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயுடன் இணைந்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருபது நாட்களும், டெல்லியில் சுமார் ஒரு மாதமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 30 நாட்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டிய இத்திரைப்படத்திற்கு சம்பவம் என பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #Thalapathy64FLday என்ற ஹெஷ்டேக்கை டிரேண்டிங் செய்து வருகின்றனர். அதாவது இன்றைய நாள் "தளபதியின் பர்ஸ்ட் லுக் நாள்" என்று பதிவிட்டு வருகின்றனர்.


இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா அர்ஜுன் தாஸ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், பல ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகள் வியாபாரமாகிவிட்டன என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது.