அடுத்த வாரத்தில் புனேவில் துவங்கும் விடாமுயற்சி சூட்டிங்
இன்னும் சில தினங்களில் லண்டனில் இருந்து அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் சென்னை திரும்பும் நிலையில், படத்தின் சூட்டிங் பூனாவில் துவங்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்தின் ஏகே 62 படம் குறித்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் அன்று மாஸ் அப்டேட் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது லைகா நிறுவனம். அஜித் துணிவு படம் வெளியானதும் தொடர்ந்து பைக் பயணத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால், எப்போது படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்காத நாளில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு அது நடக்காமல் போனது. இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால் இந்த திரைப் இந்தப் படத்தில் அர்ஜூன்தாஸ் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
மறுபுறம் இந்த திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த திரைப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாது. விரைவில் இது தொடர்பான தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்றும், அனிருத் இசையமைக்கிறார் என்றும் லைகா நிறுவனம் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதேபோல் இந்தப் படத்தில் தான் பணியாற்றவுள்ளது கனவு நனவான தருணம் என்று மகிழ்திருமேனி தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் சிறப்பான சம்பவம் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பை 70 நாட்களில் முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும், அஜித் தனது காட்சிகளின் படப்பிடிப்பிற்காக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது, அதன்படி இந்த திரைப் படத்தின் சூட்டிங் அடுத்த வாரத்தில் புனேவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் லண்டனில் இருந்து அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் சென்னை திரும்பும் நிலையில், படத்தின் சூட்டிங் பூனாவில் துவங்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதனிடையே அஜித் ஜோடியாக நடிகை த்ரிஷா இணைவது உறுதியானால், இதன் மூலம் நடிகை த்ரிஷா அஜித்துடன் ஐந்தாவது முறையாக நடிப்பார். முன்னதாக நடிகை த்ரிஷா மாற்றம் நடிகர் அஜித் ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ’என்னை அறிந்தால்’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சூர்யாவை போல கட்டுமஸ்தான உடல் வேண்டுமா? அவரது சீக்ரெட்டை தெரிந்துகொள்ளுங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ