நடிகர் அஜித்தின் ஏகே 62 படம் குறித்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் அன்று மாஸ் அப்டேட் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. லைகா நிறுவனம். அஜித் துணிவு படம் வெளியானதும் தொடர்ந்து பைக் பயணத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால், எப்போது படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்காத நாளில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு அது நடக்காமல் போனது. எப்போதுமே அஜித் - விஜய் படங்கள் தான் போட்டி போட்டு கலெக்ஷன் அள்ளும். இதனால் விஜய் லியோ படத்தில் கேங்ஸ்டராக நடிப்பதால், அதே கதைக்களத்தை அஜித்தும் ஆசைப்பட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறினார்கள். அதோடு, துணிவு படத்தை விட கலெக்ஷனில் அசத்த வேண்டும் என்பதால், கதையை தேர்ந்தெடுப்பதில் மெனக்கொட்டார் அஜித்.
அப்படி தான் தடம் படத்தின் மூலம் தமிழகமெங்கும் தடம் பதித்த இயக்குநர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தில் இணைந்தார். அஜித்துக்காக கதையை செதுக்கினார். ஒருவழியாக அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கதை பிடித்துப்போக இப்போது அப்டேட் வெளியாகிவிட்டது. நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 62-வது படத்துக்கு ‘விடாமுயற்சி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்றும், அனிருத் இசையமைக்கிறார் என்றும் லைகா நிறுவனம் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனிடையே இந்தப் படத்தில் தான் பணியாற்றவுள்ளது கனவு நனவான தருணம் என்று மகிழ்திருமேனி தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் சிறப்பான சம்பவம் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் சூட்டிங் மே மாதம் இரண்டாவது வாரம் அதாவது மே 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பை 70 நாட்களில் முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும், அஜித் தனது காட்சிகளின் படப்பிடிப்பிற்காக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் ‘விடாமுயற்சி’ படத்தின் நாயகி உட்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல் கம்போஸ் பணியை அனிருத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜனவரியில் வெளியான அஜித்தின் துணிவு படம் 300 கோடி ரூபாயிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்திற்கு தற்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ