சூர்யாவை போல கட்டுமஸ்தான உடல் வேண்டுமா? அவரது சீக்ரெட்டை தெரிந்துகொள்ளுங்கள்..!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர், சூர்யா. இவர் படத்திற்கு படம் உடல் எடையை ஏற்றுவது குறைப்பது என்று மாறிக்கொண்டே இருந்தாலும் தனது உடலை கின்னென்று வைத்து கொள்கிறார். அது எப்படி தெரியமா?   

Written by - Stalin | Last Updated : Jun 7, 2023, 08:14 AM IST
  • தமிழின் முன்னணி நடிகர் சூர்யா.
  • வாரணம் ஆயிரம் படத்திற்காக 1 வருடம் உடற்பயிற்சி செய்தார்.
  • அவர் 47 வயதிலும் கட்டு மஸ்தான உடலுடன் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா?
சூர்யாவை போல கட்டுமஸ்தான உடல் வேண்டுமா? அவரது சீக்ரெட்டை தெரிந்துகொள்ளுங்கள்..! title=

தமிழ் சினிமாவில் பல சரிவுகளை சந்தித்தும் அதிலிருந்து மீண்டு எழுந்து வந்து பல சாதனைகளை படைத்துக்கொண்டு இருபவர் முன்ணனி  நடிகர் சூர்யா. தன் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்கு  தன் உடல் அமைப்பினை அவர் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டு வருகிறார்.      

உடல் எடையை ஏற்றியது எப்படி? 

சூர்யா குறித்து அவரது பயிற்சியாளர் அல்காஸின் கூறுகையில், சிங்கம் 2 படத்தில் ஒரு அச்சமற்ற போலீஸ்காரர் கதாபாத்திரத்திற்காக,  அற்புதமான பருமனான உடலமைப்பை அடைய தினமும் இரண்டு மணி நேரம் சூர்யா உழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் 30 நிமிடங்களுக்கு கார்டியோ வெர்ஸகுலர் பயிற்சிகளுடன் (cardiovascular exercises) தனது உடற் பயிற்சிகளை  தொடங்குவாராம், அதைத் தொடர்ந்து 90 நிமிட தசையை வளர்க்கும் பயிற்சிகளான எடை தூக்கும் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவாராம். புல் அப்ஸ், சின் அப்ஸ், ஹேங்கிங் லெக் ரைஸ், ஹேங்கிங் ஓப்லிக் ரைஸ் மற்றும் ஸ்டேடிக் ஹாங்கிங் லெக் ரைஸ் ஆகியவை நடிகர் சூர்யாவின்  அட்டவணையில் உள்ள முக்கிய பயிற்சிகளாகும்.அவர் தனது மையத்தை (Abs) வலுப்படுத்த இந்த பயிற்சிகளை மேற்கொண்டோர். 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மயங்கி விழும் மதுமிதா.. இன்றைய எபிசோடில் காத்திருக்கும் அதிர்ச்சி!!

உடல் எடை குறைப்பு..

பாலிவுட் நடிகர் அமீர்கான் சிக்ஸ் பேக் ஏப்ஸ் (Abs) வளர தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாக சூர்யா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அமீர் தனது நாற்பதுகளில் 8 பேக்குகளை அடையவும் கடினமாக உழைக்கவும் சூர்யாவின் விடாமுயற்சிதான் தன்னை ஊக்கப்படுத்தியதாக கூறியிருந்தார். சூர்யா, முலில் தனது வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம்தனது உடற்பயிற்சிகளை தொடங்கினார். அவர் இயற்கையான உடல் கட்டமைப்பை நம்பியவராம். ஸ்டெராய்டுகள் மற்றும் செயற்கை முறையில் கொழுப்பு கரைத்தலை நம்பாதவர் என்றும் அவரது பயிற்சியாளர் கூறுகிறார்.  முன்னதாக சூர்யா 75 கிலோ எடையுடன் இருந்தார், ஆனால் GM டயட் மற்றும் வடிவமைத்த உடற்பயிற்சி முறையைப் பின்பற்றிய பிறகு, அவர் சுமார் 11 கிலோ வரை குறைத்தார்.  

சூர்யாவின் பயிற்சியாளர், அமீர்கானுக்கு கஜினியில் 8 பேக்குகள் வைக்க பயிற்சி அளித்தவர்.  அமீரின் நல்ல நண்பரான சூர்யா, தனது வாரணம் ஆயிரம் படத்திற்கு சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஒரு பயிற்சியாளரை அவரிடம் பரிந்துரைக்குமாறு கேட்டாராம். அப்படித்தான், சூர்யாவிற்கு தற்போதுள்ள பயிற்சியாளர் அறிமுகமானதாக கூறப்படுகிறது. 

வாரணம் ஆயிரம் படத்தில் சிக்ஸ் பேக்குடன் தோற்றமளித்த சூர்யா, அடுத்து அயன் படத்தில் மெலிந்த உடலுடன் காட்சியளிக்க வேண்டியிருந்தது. இதற்காக ஒரு வருடமாக கடின உழாப்பு போட்ட சூர்யா, அயன் படத்தில் சட்டை இல்லாத காட்சிகளின் மெலிந்த உடலுடன் காணப்பட்டார். 

ஜாக்கிங்..ரன்னிங்..

தினசரி 10 கிமீ தூரத்தை சிறப்பாக ஓடி முடிப்பவர் சூர்யா. அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதால் அவரது நுரையீரல் திறன் சிறப்பாக உள்ளதாம். பல மாதங்களாக அவர் சிக்ஸ் பேக்கைப் பெற குறைந்த உப்பு மற்றும் சாதம், இனிப்பு உணவு ஆகியவற்றைப் பின்பற்றவில்லையாம். 

உப்பை நிறுத்திக்கொண்டார்…

உடற்பயிற்சியின் உச்ச கட்டத்தில், சூர்யா ஒரு நாளைக்கு சில பழங்கள் மற்றும் தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்வாராம். உப்பை அவரே நிறுத்திவிட்டாராம். இவ்வளவு கடினமான விஷயத்தையும் சூர்யா அசால்டாக செய்துள்ளதாக அவரது பயிற்சியாளர் பெருமை பட்டு கொள்கிறார். "ஸ்டெராய்டுகள் போன்ற எந்த ஷார்ட்கட் உதவியும் இல்லாமல் அவர் சிக்ஸ் பேக்கை அடைந்தது பாராட்டத்தக்கது." என்றும் அவர் கூறுகிறார். 

“என் டயட்டை ஃபாலோ பண்ண வேண்டாம்..”

சூர்யா, ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவர் மிகவும் கடுமையான டயட் இருக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் ப்ளாக் காஃபி, வெள்ளரிக்காய் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டுள்ளார். ஆனால் இந்த டயட்டை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காரணம், அது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய டயட்டாகவும் அமைய வாய்ப்புள்ளதாம். இதே போல, அவரது சிக்ஸ் பேக், உடல் எடை ஏற்றுவது, குறைப்பது போன்ற விஷயங்களுக்கு டயட் இருப்பதற்கு முன்னால் உடற்பயிற்சி நிபுணர்களிடம் 1க்கு 10 முறை ஆலோசனை பெற்ற பிறகு பின்தொடர்வது நல்லது. 

மேலும் படிக்க | Shaktimaan: 90’s குழந்தைகளுக்கு ஜாக்பாட்..மீண்டும் வருகிறார் சக்திமான்..ஹீரோ யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News