Rakhi Sawant Latest Updates: நடிகையும் சமூக வலைதள நட்சத்திரமான ராக்கி சாவந்த் தினமும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். தற்போது மீண்டும் ராக்கி சாவந்த் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மும்பை என்சிபியின் முன்னாள் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே, நடிகை ராக்கி சாவந்த் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ராக்கியுடன் சேர்ந்து வழக்கறிஞர் காஷிப் அலி கான் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் ராக்கி சாவந்த் மற்றும் காஷிப் அலி கான் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக சமீர் வான்கடே குற்றம் சாட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவதூறு வழக்கு தொடர்ந்த சமீர் வான்கடே


அந்த அவதூறு மனுவில் சமீர் வான்கடே பேட்டி குறிப்பிட்டுள்ளார். காஷிப் அலி கான் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த போது பொய் கூறியதாகவும், அவர் கூறிய கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார். அந்த அவதூறு வழக்கின் மனுவில் காஷிப்பின் அறிக்கை குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் சமீர் வான்கடே ஊடகங்கள் மீது வெறி கொண்டவர் என்றும், பிரபலங்களை குறிவைத்து தாக்குவதாகவும் காஷிப் அலி கான் கூறியுள்ளார். 


ராக்கி சாவந்த் மீதும் குற்றச்சாட்டு


சமீர் வான்கடே அவமதிப்பு மனுவில் ரூ.11 லட்சம் நஷ்டஈடு கோரியுள்ளார். இது தவிர, காஷிப் அலி கான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதே போன்ற உள்ளடக்கத்தை வெளியிட்டதாகவும், அவரது பதிவையும் ராக்கி சாவந்த் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அவரது இமேஜுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீர் வான்கடே தனது மனுவில் கூறியுள்ளார்.


மேலும் படிக்க - Ramya Krishnan: ரம்யா கிருஷ்ணனின் மகனா இது? இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாரே! வைரல் புகைப்படங்கள்..


யார் இந்த காஷிப் அலி கான்?


காஷிப் அலி கான் வழக்கறிஞர் ஆவார். அவர் 2021 ஆம் ஆண்டில் கப்பல் போதைப்பொருள் சோதனை வழக்கில் சமீர் வான்கடேவின் குழுவால் கைது செய்யப்பட்டார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.


சமீர் வான்கடே தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பது என்ன? 


சமீர் வான்கடே மனுவில், "காஷிப் அலி கான் மற்றும் ராக்கி சாவந்த் உண்மைகளை சரிபார்க்காமல் தரக்குறைவான அறிக்கைகளை வெளியிட்டது. அதற்கு காரணம் அவருக்கு எதிரான வழக்கில், தண்ணி குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கவும், அவரின் கூட்டாளிகளை காப்பாற்றவும், இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்புவது காஷிப் அலிகானின் நோக்கமாக இருந்தது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க - ப்ரைம் வீடியோ அசத்தல்.. 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ