துணை நடிகராக சினிமாதுறையில் நுழைந்து, இன்று மிகப்பெரிய நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, பாடகராக மற்றும் பல இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் ஆகா இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.  பல முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை விட பல மடங்கு முன்னோக்கி இருக்கிறார் சிவா.  ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத தூரத்திற்கு சென்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் மழை கொட்டும் நடிகர் அந்தஸ்தில் உள்ளார்.  ஆனால் இது எல்லாம் ஒரு நாள் இரவில் அவருக்கு நடந்திடவில்லை.  கடந்த 10 ஆண்டுகளின் கடின உழைப்பின் பலனாக இன்று யாரும் எட்டி பிடிக்க முடியாத உயரத்திலும், தள்ளி விட்டாலும் தானாக எந்திரிக்கும் பக்குவத்தில் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஹாரிஸ் இசையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன்?


விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து, பிறகு ஆங்கர், அவார்ட் சோ ஹோஸ்ட் என முன்னேறினார்.  2012ம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.  பின் 2013ம் ஆண்டு தனுஷ் உடன் '3' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.  அதன் பின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என சிவா நடித்த படங்கள் எல்லாம் திரையரங்கில் ஹிட் அடித்தன.  2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விஜய் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, நான்கு எடிசன் விருதுகள், மூன்று SIIMA விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகளை வென்றுள்ளார்.



2014ம் ஆண்டில் இருந்து தனது பாணியை மாற்றி அமைக்க முடிவு செய்தார் சிவகார்த்திகேயன்.  மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என காமெடி கலந்த ஆக்சன் படங்களில் நடித்தார்.  இதில் சில படங்கள் கைகொடுத்தாலும், பல படங்கள் தோல்வி அடைந்தது.  2019ம் ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படம் அவரை மீண்டும் மேலே கொண்டு சென்றது.  இந்த படம் சிறந்த பேமிலி திரைப்படமாக அமைந்ததால் மிகப்பெரிய வசூல் ஹிட் அடித்தது.  பின்பு, ஹீரோ படம் எதிர்பார்த்த அளவிற்கு போகாததால், டாக்டர் படத்தை நம்பி இருந்தார் சிவா.  கொரோனா தொற்று பரவலால் இப்படம் எதிர்பார்த்த தேதியில் வெளியாகவில்லை.  பிறகு OTT-யில் வர போகிறது என்ற செய்திகள் வந்தாலும், திரையரங்கில் வெளியாகி 2021-ல் வெளியான படங்களில் டாப் 5வது படங்களில் இடத்தை பிடித்தது டாக்டர்.



இப்படம் கிட்டதட்ட கொரோனா தொற்று காலத்திலும் 100 கோடி வசூல் செய்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த வருடம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.  மார்ச் மாதம் DON, மே மாதத்தில் அயலான் மற்றும் நவம்பர் மாதத்தில் SK20 படத்தை வெளியிட திட்டம் வைத்துள்ளனர்.  நடிகரை தாண்டி தயாரிப்பாளராகவும் கனா போன்ற சிறந்த படத்தை கொடுத்துள்ளார்.  சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை எழுதியும் இருந்தார் சிவா.  இந்த அரபிக் குத்து பாடல் தற்போது பட்டிதொட்டி எங்கும் வைரல் ஆகி வருகிறது.  இதேபோல் உயர்ந்து சென்று மக்களை மகிழ்விக்க சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள்!


மேலும் படிக்க | 'ராக்கெட்டில் போனாரா சிவகார்த்திகேயன்?'


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR