சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக வரவிருக்கும் அயலான் டீசர்?

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் டீசர் பிப்ரவரி-17ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று ரிலீசாக போவதாக கூறப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 01:35 PM IST
  • வேற்றுகிரக வாசி பூமிக்கு வருவதை வைத்து இப்படம் உருவாகிறது
  • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman)இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக வரவிருக்கும் அயலான் டீசர்? title=

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'அயலான்' (Ayalaan).  இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.  வேற்றுகிரக வாசி பூமிக்கு வருவதை வைத்து இப்படம் உருவாகிறது, இயக்குனர் ரவிக்குமாரின் முந்தைய படமான 'இன்று நேற்று நாளை' படமும் அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த கதையம்சம் கொண்டதாக இருந்தது.  இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

ALSO READ | ‘அயலான்’ first look: தனது புது நண்பரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்தி..!

இப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு 'அயலான்' என்று கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அறிவிக்கப்பட்டது.  ஹாலிவுட் படங்களுக்கு பயன்படுத்தப்படும் கேமரா முதன்முறையாக இந்த படத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதமாகி கடந்த ஆண்டு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman)இசையமைத்துள்ளார்.

ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு மைல் கல்லாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் அமையும் என்று கூறப்படுகிறது.  இப்படத்தின் போஸ்டர்கள் மூலம் ஏலியன் கதாபாத்திரமும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.  இதன் போஸ்டர் மற்றும் 'வேற லெவல் சகோ' என்ற பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி -17ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவர் நடிப்பில் உருவான DON படம் மார்ச் 25ம் தேதி திரையரங்கில் வெளிவர உள்ளது.

ALSO READ | 'மண்டேலா' இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News