தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இறைவிப் படம் முடிந்ததும் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷ் இணைப்பில் ஒரு அதிரடி திரில்லர் படம் உருவாக வேண்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே செய்திகள் வெளியாகின. ஆனால் அதைக்குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில மாற்றம் காரணமாக, இந்த படம் தாமதம் ஆனது என்று கூறப்படுகிறது. மேலும் கார்த்திக் சுப்பராஜும் "மெர்குரி" மற்றும் "பேட்ட" போன்ற படங்களை இயக்கி முடித்துவிட்டார். மறுபுறம் தனுஷ் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது "D40" படம் லண்டனில் படப்பிடிப்பு தொடங்க தயாராக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அவரது படக்குழுவினர் லண்டனுக்கு சென்றுள்ளனர். ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
"டி40" படத்தில் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உட்பட சில புதிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜேம்ஸ் காஸ்மோ ஹாலிவுட்டில் பிரேவ்ஹார்ட், டிராய், கேம் ஆஃப் திரோன்ஸ், ஆஃப் நார்னியா: தி லயன்', விட்ச் அண்ட் தி வார்ட்ரோப் மற்றும் பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.