பிக் பாஸ் 7 தமிழ் கானா பாலா சம்பளம்: இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்த சரவணா விக்ரம், பூர்ணிமா, ரவீனா, மணி, பிராவோ, அக்ஷயா, கானா பாலா ஆகியோரில் கானா பாலா நேற்று வெளியேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7:
ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் (Bigg Boss). தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் தோன்றிய சில முகங்களும், சில டிஜிட்டல் முகங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக உள்ளனர். இதில் வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்ட சிலர் கடந்த சில வாரங்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


தினேஷ் -விஷ்ணு சண்டை:
இதனிடையே கடந்த வாரம் போட்டியாளர்கள் மத்தியில் எப்பவவும் போல சலசலப்பு சர்ச்சைகள் நடந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக, தினேஷ் விஷ்ணு (Dinesh - Vishnu Clash) சண்டைதான் பூதாகரமாக வெடித்தது. விஷ்ணு தினேஷை நரி என்று கூற, விஷ்ணுவை கண்டன்ட் பொறுக்கி, அமுல் பேபி என்று தினேஷ் கூறி இருக்கிறார். இதனால் கடுப்பான விஷ்ணு சேரை எட்டி உதைத்து இந்த மிதி உனக்கு தான் என்று கூறியிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் இவர்கள் இருவருக்கும் நடந்த சர்ச்சை தான் வெடித்தது. 


மேலும் படிக்க | த்ரிஷா குறித்த அவதூறு பேச்சில் மன்சூர் அலிகான் தந்த அலட்சிய விளக்கம்


இந்த வார எவிக்ஷன்:
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் (Bigg Boss Tamil 7) கடந்த வாரம், ஐஷு வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இந்த வாரம் ஒன்றல்ல, இருவரல்ல, எட்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர். விசித்ரா, ரவீனா தாஹா, மணிச்சந்திரா, பூர்ணிமா, ஆர்ஜே பிராவோ, கானா பாலா, அக்‌ஷயா உதயகுமார் மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் பிக் பாஸ் ஏழாவது வாரத்தில் வெளியேற்றப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டனர். இறுதி வாக்களிப்பு போக்குகளின் படி, கானா பாலா குறைந்த வாக்கு பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.



கானா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியான கானா பாலாவிற்கு (Gana Bala Salary In Bigg Boss) பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 21 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த கானா பாலா 5,25,000 சம்பளமாக பெற்றுள்ளார்.


மேலும் படிக்க | மன்சூர் அலிகானை விளாசிய த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு.. என்னதான் விவகாரம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் (ஜீ தமிழ் நியூஸ்) பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ