Garudan OTT Release Date : சூரி நடிப்பில் ரிலீஸாகி வெற்றி பெற்ற கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எனவே எந்த தளத்தில் எப்படி பார்ப்பது என்கிற தகவலை இந்த கட்டுரையில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காமெடியன் டூ ஹீரோ:
நடிகர் சூரி, இப்போது முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்களின் பல படங்களில் ஒரு காலத்தில் பெயர் குறிப்பிடாத கதாப்பாத்திரங்களிலும், கூட்டத்தில் இடையில் நிற்கும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவ்வாறே நடித்து, பொறுமையாக சிறிய பட்ஜெட் படங்களில் நல்ல கதாப்பாத்திரங்களை பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவரை, முதன் முதலில் பெருமைப்படுத்தியது வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம்தான். இப்படத்தில் 50 பரோட்டாக்களை சாப்பிட்டு மீண்டும் “கோட்டை அழிங்க..மொதல்ல இருந்து சாப்பிடுறேன்..” என்று இவர் கூறியது பலரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. படம் வெற்றி பெற்றதுடன் சேர்ந்து, சூரியும் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்தார். எந்தெந்த ஹீரோக்களின் படங்களில் ஓரிரண்டு காட்சிகளுக்கு வந்தாரோ, அதே ஹீரோக்களுடன் சேர்ந்து அவர்களுடன் சேர்ந்து காமெடியனாக நடித்தார். 


தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரியை பார்த்த வெற்றிமாறன், திடீரென விடுதலை படம் மூலம் அவர் கையில் சீரியஸான ரோலை கொடுத்தார். ஆனால் எந்த வேலை கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிக்கும் சூரி, இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். அந்த வகையில், மே மாதம் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம்தான், கருடன். 


மேலும் படிக்க | மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய ரொமான்டிக் மலையாள படங்கள்


கருடன் திரைப்படம்:
இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் கருடன். இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதி இருந்தார். மேலும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த மே 31 ஆம் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மயத்தியல் நல்ல விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக இதில் சூரியின் ஆட்டம் வெறித்தனமாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது.


வசூல் வேட்டை அடித்த கருடன் திரைப்படம்:
கருடன் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்த நிலையில், விமர்சன ரீதியாகவும் கலெக்‌ஷன் ரீதியாகவும் சக்கைப்போடு போடது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக முதல் நாளே இந்த படம் மூன்று கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியது. 15 நாட்களில் 50 கோடி வசூலை செய்ததாக கூறப்பட்டது. இதனால் மக்கள் தற்போது கருடன் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கின்றனர்.


ஓடிடியில் வெளியீடு:
இந்நிலையில் தியேட்டரில் கருடன் படத்தை மிஸ் செய்தவர்கள் தற்போது ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம். அதன்படி கருடன் திரைபடம் இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 



எப்போது பார்ப்பது? 
இதனிடையே கருடன் படம், கடந்த ஜூன் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வந்ததால் இந்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியிருக்கிறது, அதனுடன் இது தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ