Best Romatic Malaiyalam Movies: மலையாள மொழியில் வெளியாகும் பல சிறப்பான திரைப்படங்களை மக்கள் மலையாள மொழியிலேயே ரசித்து பார்க்க அதிகம் விரும்புகிறார்கள். இவை மலையாள ரசிகர்களை தவிர பல மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
Best Romatic Malaiyalam Movies: மலையாள மொழிப் படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அதிலும் மலையாள மொழியில் வெளியாகும் ரொமான்டிக் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு உள்ளது. தற்போது நீங்கள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய மலையாள ரொமான்டிக் திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் அன்னையும் ரசூலும். முஸ்லீம் டாக்சி டிரைவர் ரசூல் எப்படி கிறிஸ்தவ சேல்ஸ் பெண் அன்னாவை காதலிக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டது இந்த படத்தின் திரைப்படம்.
வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் - கல்யாணி பிரியதர்ஷன் , தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹிருதயம்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியான படம் மாயாநதி. இதில் டோவினோ தாமஸ் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளனர்.
பாங்கலூர் டேய்ஸ் என்னும் மலையாளத் திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை எழுதி இயக்கியுள்ளார் அஞ்சலி. இது அன்வர் ரஷீத் தயாரிப்பில் உருவானது. இதில் துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின் பவுலி, நஸ்ரியா நசீம், பார்வதி மேனன், இஷா தல்வார், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள ரொமான்டிக் திரைப்படம் பிரேமம். அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி மற்றும் சாய் பல்லவி வுடன் மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இயக்குநர் கிரிஷ் ஏ. டி. இணைந்து எழுதி இயக்கி மலையாள மொழியில் 2024 இல் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படம் பிரேமாலு. இந்த படத்தில் நஸ்லன் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டும் நிவின் பாலி மற்றும் இஷா தல்வார் இணைத்து நடித்திருந்த படம் தட்டத்தின் மறையத்து . இந்த படம் இந்து-முஸ்லீம் காதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்ட ரொமான்டிக் திரைப்படமாகும்.
ஜுட் ஆந்தனி ஜோசஃப் இயக்கத்தில் நஸ்ரியா , நிவின் பாலி , வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்து நடித்த இப்படம் 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ரொமான்டிக் படங்களில் ஒன்றாகும்.