பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்..

Prabhu Deva Singanallur Signal Movie : முத்தமிழ் படைப்பகம் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்".   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jul 1, 2024, 08:29 PM IST
  • பிரபு தேவாவின் புதிய படம்
  • ஷூட்டிங் தொடங்கியது
  • படத்தின் பெயர் சிங்கநல்லூர் சிக்னல்
பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்.. title=

Prabhu Deva Singanallur Signal Movie : முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர்  AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் "சிங்காநல்லூர்  சிக்னல்" படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, கோலாகலமாகத் துவங்கியது. 

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன்  சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது.  கோலாகலமாக நடந்த படத்தின் பூஜையை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியபோது… 

“மாஸ்டர் கமலஹாசன் மிஸ்டராகிவிட்டார் ஆனால் பிரபு தேவா மட்டும் இன்னும் மாஸ்டராகவே இருக்கிறார். முத்தமிழ் படைப்பகம் என் வீடு மாதிரி, மிக மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். பிரபு தேவா சார், சமீபத்தில் நான் நடித்த படத்தில் மிகவும் உதவியாக இருந்தார். அவர் நடனப்புயல் மட்டுமில்லை, இயக்குநர் புயலும் தான்” என்று கூறினார். 

மேலும் படிக்க | பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் பிரபுதேவா பேசியதாவது...
"இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு பர்ஸனலாகத் தெரியும், எல்லோருடனும் படம் செய்துள்ளேன், ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் பற்றி எல்லோரும் சொன்னார்கள், இந்த கம்பெனியில் நாலைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டிக்கொண்டேன். மிக கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள்" என்று கூறினார். 

Prabhu Deva

நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். லேபில் வெப் தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹரி சங்கர், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிஃபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, PL தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைக் கோவையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.  படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

மேலும் படிக்க | GOAT படத்திற்கு பிறகு பிரபு தேவா நடிக்கும் புதிய படம்! வெளியானது டீசர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News