பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகா உட்பட தேசிய அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது டிவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், 


விவாதத்தை துப்பாக்கியால் வெல்ல முனைவது மோசமான வழி என சாடியுள்ளார். மேலும் கவுரி லங்கேஷ் மறைவால் வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.