மஞ்சிமா மோகனை காதலிக்கிறேன் - காதலை உறுதிப்படுத்திய கௌதம் கார்த்திக்!
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி தாங்கள் இருவரும் காதலித்து வருவதை தங்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளனர்.
நடிகர் கெளதம் கார்த்திக்கிற்கு தமிழ் திரையுலகி குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, இவர் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'தேவராட்டம்' படத்தில் நடித்ததன் மூலம் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. நீண்ட நாட்களாக கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்து வந்தது, ஆனால் இந்த ஜோடி தங்களது காதலை உறுதிப்படுத்தாமல் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது இருவரும் தங்களது இதயபூர்வமான பந்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். காதல் ரசம் சொட்ட சொட்ட இருவரும் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டு உறவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் - வாரிசு முதல் சிங்கிள் அப்டேட்
கெளதம் கார்த்திக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சரியான நபர் உங்கள் வாழ்க்கையில் வந்தால் என்ன நடக்கும்? உங்கள் கண்களை அவர்கள் மீது வைக்கும் தருணத்தில் நீங்கள் அன்பால் நிறைந்திருப்பீர்கள், உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் உங்கள் வயிறு உணரும்' என்று எழுதியுள்ளார். மேலும் மஞ்சிமாவை டேக் செய்து, சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ஆரம்பத்தில் இது ஒரு நல்ல நட்பு என்று தான் நினைத்தேன், ஆனால் நாளைடைவில் எங்களுடைய பிணைப்பு வலுவடைந்து விட்டது என்று கூறியுள்ளார், மேலும் தங்களுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன், நாம் ஒன்றாக சேர்ந்து நம் பயணத்தைத் தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மஞ்சிமாவும், கௌதம் கார்த்திக் உடனான தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார், இதுகுறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கெளதம் பகிர்ந்துகொண்ட அதே புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு, அதில் 'மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன என்னை காப்பாற்றும் தேவதையாக என் வாழ்வில் வந்தாய், வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர உதவினாய்! என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் எனக்குக் கற்றுக் கொடுத்தாய், நீ எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருப்பாய்' என்று எழுதியுள்ளார். தற்போது கௌதம் சிம்புவுடன் இணைந்து 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார், மறுபுறம் மஞ்சிமா மோகன் 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்ற படத்தில் நடிக்கிறார்.
மேலும் படிக்க | துணிவு ப்ரோமோஷனில் அஜித்?... வைரலாகும் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ