கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜூன்-9ம் தேதியான இன்று மகாபலிபுரத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இவர்களின் திருமண புகைப்படங்களை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.  பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடக்கும் இந்த திருமண விழாவில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  இவர்களின் திருமணத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளிக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!


அதோடு வெளியான சில தகவல்களின்படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆவணப்படமாக எடுக்கப்போவதாகவும், அதனை ஒளிபரப்ப ஒரு பிரபல ஓடிடி தளத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.  இதற்கென அந்த ஓடிடி தளம் ஒரு பெரிய தொகையை வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.  ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி நயன்தாராவின் திருமணத்தை இயக்குனர் கவுதம் மேனன் படமாக உருவாக்கப்பபோவது இல்லையாம்.



உண்மையிலேயே இயக்குனர் படமாக்க விரும்புவது திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கும் நயன்தாராவின் வாழ்க்கை பயணத்தை தானாம்.  திரையுலகில் சாதாரண நடிகையாக என்ட்ரி ஆனது முதல் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிக்கும் நயன்தாரா வாழ்வில் கடந்து வந்த பல சவால் நிறைந்த சிக்கலான பாதைகளை ஆவணப்படமாக எடுக்கவிருக்கிறார்.  இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் முடிந்த பிறகு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.  தற்போது நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.


மேலும் படிக்க | நயன்-விக்னேஷ் ஜோடி! களைகட்டும் கல்யாண கொண்டாட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR