‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் வில்லனாகும் கௌதம் மேனன்: தமிழ் திரை உலகில் பிரபல இயக்குநராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும், கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, மற்றும் த்ரில்லர்களான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, மற்றும் என்னை அறிந்தால். இதில் வாரணம் ஆயிரம் திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. கௌதம் வாசுதேவ் மேனன் தனது ஃபோட்டான் கதாசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பான தங்க மீன்கள் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடைகிடையில் படங்களை இயக்கியும் வருகிறார். சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்... முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி!


இந்த நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக இணைந்துள்ளார். மேலும் சமீபத்தில் அவர் தொடர்பான சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த படத்தில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகுகிறார். இது அவரது முதல் படமாக உருவாகி வருகிறது.


அதுமட்டுமின்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்சரண் கையாள, படத்தொகுப்பை ஜானும் கலை இயக்கத்தை அருணும் கவனிக்கின்றனர். ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன் திரில்லராக இந்த படம் இருக்கும். கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.


தொடர்ந்து தன்னுடைய நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துவரும் கௌதம் மேனன், தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ