நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒருவழியாக வெளியாகும் கவுதம் மேனன் படம்!
Joshua Imaibol Kakka movie: கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது.
Joshua Imaibol Kakka movie: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 10-12 ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. இதற்கு முன்பு நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம். ஆக்ஷன் காட்சிகளை 'ஜவான்', 'சிட்டாடல்' புகழ் யானிக் பென் கோரியோகிராஃப் செய்திருக்கிறார். கிளாஸி ஆக்ஷன் படமாக வந்திருக்கிறது. ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மின்னலே’ என என்னுடைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் வேறொரு ஜானரில் என்னை தகவமைத்துக் கொண்டேன். அதுபோல, இந்தப் படமும் முற்றிலும் எனக்கு வேறொரு ஜானர். கொலையாளிகள், கேங்க்ஸ்டரிடம் இருந்து எப்படி கதாநாயகியை இமைப் போல ஜோஷ்வா காப்பாற்றுகிறான் என முழுக்க முழுக்க ஆக்ஷனில் வடிவமைத்துள்ளோம். இந்தப் படம் மூலம் என்னால் முழுக்க ஆக்ஷன் படத்தைக் கையாள முடியும் எனத் தெரிந்து கொண்டேன்” என்றார்.
என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியான பிறகு, முழுநேர நடிகராக மாறினார் கவுதம் மேனன். இதற்கு காரணம் அவருக்கு இருந்த நிறைய கடன் நெருக்கடி தான். கடந்த 2017ம் ஆண்டு வெளியாக வேண்டிய துருவ நட்சத்திரம் படம் பல்வேறு காரணங்களால் தள்ளி போனது. விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார், டிடி, ரிது வர்மா, விநாயகன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் துருவ நட்சத்திரம் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரிலீஸ் செய்ய மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், தனது மற்றொரு படமான ஜோஷ்வாவை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவழியாக ஜோஷ்வா படம் மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க | Siren Twitter Review: ‘சைரன்’ படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ