தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ' ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ' ஜென்டில்மேன் 2 ' படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் முன்னணி  தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும். 


பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். 


ALSO READ | RRR vs Valimai: படத்தின் நீளத்திலேயே தொடங்கிருச்சு Fight!


தனது வழக்கப்படி, ரீ எண்ட்ரியிலேயே அதிரடியான அறிவிப்புடன் செய்து,  அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 


ஜென்டில்மேன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ள தயாரிப்பாளர் குஞ்சுமோன், படத்திற்கான இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் என இதுவரை யாரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 


இந்த நிலையில், இசையமைப்பாளரை சொல்லுங்கள் என ரசிகர்களுக்கு போட்டி அறிவித்து அசத்தியுள்ளார். 



 


விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதை சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.


தனது பாணியில் திரைப்படத்தின் பிற அறிவிப்புகளையும், பிரம்மாண்டமாக, வித்தியாசமாக வெளியிடுவார் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது. 


எங்கும் எதிலும் புதுமையையும் பிரமாண்டத்தையும் கையாளும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் , ஜென்டில்மேன் 2 படத்திலும் பிரமாண்ட அறிவிப்புகளை துவங்கி,  ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே கவனத்தை ஈர்த்து வருகிறார்.


ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR