கலைத்தாய் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை சிவாஜி கணேசனுக்கு இன்று  93-வது பிறந்தநாள். செவாலியே சிவாஜி கணேசனை சிறப்பு செய்யும் வகையில், கூகுள் டூடுல் போட்டுமரியாதை செலுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாளன்று பிறந்த சிவாஜி கணேசன் நடிப்புக்கே இலக்கணம் வகுத்தவர் என்ற பெருமை பெற்றவர். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், கணேசன் என்ற ஒப்புயர்வற்ற நடிகருக்குக் 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினார்.



அன்றிலிருந்து அவர் சிவாஜி என்றே அறியப்பட்டார். கணேசன் என்று சொன்னால் யாருக்கும் சிவாஜியை அடையாளம் காணமுடியாது என்பது தமிழகத்தின் திறமை மிகுந்த நடிகரின் பெருமையைச் சொல்ல போதுமானது.
 
1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி. 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  


Also Read | Google Doodle: இந்தியாவின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் கூகுள்


உலகை விட்டு சென்றாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதிலும், திரை சரித்திரத்திலும் சிவாஜி கணேசனுக்க்கு என்றென்றும் உண்டு. சிவாஜியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது நிதர்சனமான உண்மை.


தசாவதாரம் எடுத்து மாபெரும் நடிகராய் உருவெடுத்தாலும், தான் சிவாஜியின் நாற்காலிக்குத் தான் ஆசைப்படுவதாக நடிகர் கமலஹாசன் சொல்வதே, சிவாஜியின் நடிப்புத் திறனுக்கு இன்றும் சான்றாக விளங்குகிறது. 



பாச மலராய் பூத்த சிவாஜி, விறகு வெட்டியாக பாத்தா பசுமரம் என்ற பாடலால், ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்துவிட்டவர். சட்டி சுட்டதடா என்று பாடிய செவலியே, பூங்காற்றையும் தனது நடிப்பால் திரும்ப வைத்து முதல் மரியாதையை பெற்றவர்.


இன்று நம்முடன் நேரடியாக இல்லாவிட்டாலும், நினைவால் நம்முடன் இணைந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்… 


Also Read | ஜோதிகாவின் 50வது திரைப்படம் உடன்பிறப்பே அக்டோபர் 14 ரிலீஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


https://www.facebook.com/ZeeHindustanTamil


https://twitter.com/ZHindustanTamil