Movie Release: ஜோதிகாவின் 50வது திரைப்படம் உடன்பிறப்பே அக்டோபர் 14 ரிலீஸ்

OTTயில் ரிலீசாகும் ஜோதிகாவின் 50வது திரைப்படம் ‘உடன்பிறப்பே’...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 30, 2021, 07:58 PM IST
  • ஜோதிகாவின் 50வது திரைப்படம் ‘உடன்பிறப்பே’ OTTயில் ரிலீஸ்
  • சசிகுமார் உடன்பிறப்பாக நடித்திருக்கிறார்
  • அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த படம் உடன்பிறப்பே
Movie Release: ஜோதிகாவின் 50வது திரைப்படம் உடன்பிறப்பே அக்டோபர் 14 ரிலீஸ் title=

சென்னை: பிரபல நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. உடன்பிறப்பே திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜோதிகா மற்றும் சசிகுமார் இருவரும் உடன்பிறப்புகளாக நடித்திருக்கும் உடன்பிறப்பே  திரைப்படம் அக்டோபர் 14ம் தேதியன்று 240 நாடுகளில் வெளியாகிறது.

 
 
 
 

 
 
 
 

A post shared by amazon prime video IN (@primevideoin)

உடன்பிறப்பே அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து நான்கு திரைப்படங்கள் தயாரிப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த ஒப்பந்தத்தின் முதல் படமாக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியானது. அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. 

எரா சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் குடும்பபாங்கான திரைப்பட ம், அமேசான் பிரைம் வீடியோவிலும் ரக்த சம்பந்தம் என்ற பெயரில் தெலுங்கிலும் பிரத்தியேகமாக வெளியாகும்.  

Also Read | நடிகை ரஷ்மி கன்னாவின் சமீபத்திய போட்டோஷூட்

திரையுலகில் ஜோதிகாவின் பயணம் மற்றும் அவரது திரைவாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல் திரைப்படமாக உடன்பிறப்பே இருக்கும் என்று கூறப்படுகிறது.  ஜோதிகா, சசிகுமார் இருவரைத் தவிர, சமுத்திரக்கனி, கலையரசன், சூரி என பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

சகோதரப்பாசம், காதல், செண்டிமென்ட் என உணர்வுகளையும், குடும்ப உறவுகளையும் ஆழமாக சொல்லும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது உடன்பிறப்பே திரைப்படம். 

வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஆண்டனி ரூபென் படத்தை தொகுத்துள்ளார். உடன்பிறாபே படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் D இமான்.

Also Read | விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

https://www.facebook.com/ZeeHindustanTamil

https://twitter.com/ZHindustanTamil

Trending News