பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்த மூன்று முக்கிய பிரபலங்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என்கிற பட்டியல் விரைவில் வெளியாகும்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 29, 2021, 02:23 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்த மூன்று முக்கிய பிரபலங்கள்

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். 

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக அவ்வப்போது புரோமோக்கள் வெளியாகி வருகிறது. அப்படி முதல் புரோமோவில் பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்து வைத்தார் கமல்ஹாசன் (Kamalhaasan). 

ALSO READ | Bigg Boss Tamil Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

இதற்கிடையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது மேலும் 3 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல குணசித்திர நடிகர் நிழல்கள் ரவி, காங்கிரஸ் பிரமுகரும் திருநங்கையான அப்சரா ரெட்டி மற்றும் பாடகி சின்னபொண்ணு ஆகியோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News