திரையரங்குகளைப் போலவே ஓடிடி தளங்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பல முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்றும் நடிகர்களும்கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆளுக்கொரு ஓடிடி தளத்தை ஆரம்பித்துவருகின்றனர். கொரோனா முடக்கத்துக்குப் பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்களும்கூட ஓடிடிகளில் வெளியாக ஆரம்பித்துவிட்டதால் இந்திய சினிமாவில் ஓடிடியின் வளர்ச்சி அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரையரங்கில் ரிலீஸான படங்களுக்கும்கூட  ஓடிடியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவையும்  பெரும் தொகைக்கு விலைபோகின்றன. படத்தின் பாதி பட்ஜெட் ஓடிடி ரைட்ஸ் வாயிலாக மட்டுமே படக்குழுவுக்குக் கிடைத்துவிடுவதால் இதில் இரு தரப்புக்கும் பரஸ்பர லாபம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் சுமார் 50 ஓடிடி தளங்கள் வரை இருப்பதாக மத்திய அரசின் தகவல் தெரிவிக்கிறது. இதனிடையே ஓடிடி தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் கடந்த ஆண்டு மத்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது.


மேலும் படிக்க | RRR: ரிலீசுக்கு முன்னாடியே இவ்ளோ பிசினஸா? ஷாக் மோடில் திரையுலகம்!


இந்நிலையில் அவ்விதிமுறைகள் தற்போது அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஓடிடியில் வரும் வீடியோக்கள் வயதின் அடிப்படையில் 5 வகைகளாக பிரிக்கப்படவுள்ளதாம். அனைவரும் பார்க்கும் வகையில் உள்ள வீடியோக்களுக்கு U எனும் சான்றிதழும், 7 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க்கூடிய வீடியோக்களுக்கு U/A 7+ எனவும் பிரிக்கப்படவுள்ளதாம். அதேபோல 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 13+ எனவும் 16 வயதுக்கு மேல் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 16+ எனவும் வயது வந்தவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு A எனும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாம்.


இதில் U/A 13+ வீடியோக்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டும் எனவும் உறுதியாகக் கூறப்படவுள்ளதாம். விரைவில் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ‘அந்த’ பிளேயர்தாங்க ரொம்பப் பயம் காட்டுறாரு: கே.எல். ராகுல் ஓபன் டாக்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR