விவாகரத்திற்கு பின் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்ட ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி சமீபத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர்.
இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷும், பாடகியான சைந்தவியும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தனர். பள்ளியில் படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருந்த இவர்கள், 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காதலில் இருந்த போதும், திருமணம் ஆன பின்பும் இருவரும் இணைந்து நிறைய பாடல்களை உருவாக்கியுள்ளனர். அவற்றில் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தும் உள்ளது. ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து சைந்தவி பாடிய "யாரோ இவன்" மற்றும் "பிறை தேடும் இரவினிலே" ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | நடிகர் விஜய்க்கு இருக்கும் ஒரே ஒரு நிறைவேறாத ஆசை! என்ன தெரியுமா?
சைந்தவி தமிழ் திரைப்படங்களில் பாடகியாக உள்ளார். குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். பாடுவது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்துள்ளார். ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது, பெண் நட்சத்திரங்களுடன் நெருக்கமாக நடிப்பது சைந்தவிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் விவாகரத்து செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இருவருக்கும் சமீபத்தில் தான் அன்வி என்ற குழந்தை பிறந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவாகரத்து தொடர்பாக பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இருப்பினும் அதனை இருவரும் மறுத்தனர். விவாகரத்து செய்தாலும் தாங்கள் நண்பர்களாகவே இருப்போம் என்று ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சி கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்றது. இதில் சைந்தவியும் கலந்து கொண்டு பாடல்கள் பாடினார். மேலும் சில பாடல்களை இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ஜிவி பிரகாஷ் பியானோ வாசிக்க, தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான மயக்கம் என்ன படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே என்ற பாடலை சைந்தவி பாடினார். அவர் இந்த பாடலை பாடியபோது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்து கொண்டாடினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் அமரன் படத்துக்காக ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இதில் அவரது இசையை பலரும் பாராட்டி இருந்தனர். அடுத்ததாக அஜித் - ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தில் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சில பிரச்சனைகளால் முன்பு இந்த படத்தில் பணியாற்றிய தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறி உள்ளார்.
மேலும் படிக்க | புஷ்பா 2 வசூல் : முதல் நாளிலேயே இத்தனை கோடியா! எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ