இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் தற்போது நடிகர், தயாரிப்பாளர் என வளர்த்துள்ளார். அவரது நடப்பில் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இளைஞர்களை டார்கெட் செய்து படங்களில் நடித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'கள்வன்'. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி 2024 அன்று வெளியாகவுள்ளது. ரேவா இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க | விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் நிச்சயம் ஹிட் அடிக்கும் - ஒளிப்பதிவாளர் கேயு மோகனன்


ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்தோணி தாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 'குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்...' எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. 


இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார்.


ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.


ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்து படங்கள்:
கடந்த வாரம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ரெபெல் படம் திரையரங்குகளில் வெளியானது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4 ஆம் தேதி கள்வன் படமும், ஏப்ரல் 11 ஆம் தேதி டியர் படமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் படமும் மே மாதம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த வாரத்தில் படங்களை வெளியிடுவதால் கோலிவுட்டின் அடுத்த விஜய் சேதுபதியா ஜிவி பிரகாஷ் என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிக்கும் பேமிலி ஸ்டார்! வெளியானது 3வது சிங்கிள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ