பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்து வரும் தனுஷ், யுவன்சங்கர் ராஜா இசையில் இளையராஜாவை ஒரு பாடலைப் பாட வைத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ், ஏற்கனவே இளையராஜா இசையில் அது ஒரு கனாக்காலம், இந்தி ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தான் தயாரித்த அம்மா கணக்கு படத்துக்கு, இளையராஜாவை இசை அமைக்க வைத்திருந்தார். 


சமீபத்தில் தனுஷிடம் ட்விட்டரில் ஒரு ரசிகர், 'நீங்கள் எப்போது இளையராஜா இசையில் பாடுவீர்கள்?' என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தனுஷ், 'அந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமா?' என்று சந்தேகத்துடன் பதில் கூறியுள்ளார். 


தற்போது நடிகர் தனுஷ்க்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இளையராஜா இசையில், அமோல் படேவ் மராத்தியில் இயக்கும் படம், ஃப்லிக்கர். இதில் ஒரு பாடலைப் இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ளார்.