Happy Birthday Nayanthara: ரசிகர்களுக்கு பரிசாக இன்று வெளியாகிறதா நெற்றிக்கண் டீசர்
ஹீரோவுக்காக படம் எடுக்கப்படும் காலம் போய் ஹீரோயினுக்காக படம் எடுக்க வைத்த சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர்.
இன்று தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள். நயன்தாரா ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் பரிசாக மிகப்பெரிய விஷயம் காத்திருக்கிறது.
இன்று காலை சரியாக 9.09 மணிக்கு, அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அவரது படமான ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.
‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான நயன்தாரா (Nayanthara) படங்களைப் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்திருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை படைத்த நடிகைகளில் நயந்தாராவின் பெயர் கண்டிப்பாக முதன்மையான இடங்களில் இடம்பெறும்.
ஹீரோவுக்காக படம் எடுக்கப்படும் காலம் போய் ஹீரோயினுக்காக படம் எடுக்க வைத்த சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். ‘அறம்’, ‘டோரா’. ‘ராஜா ராணி’ என பல படங்களில் நடிப்பின் மிகச்சிறந்த பரிமாணங்களைக் காட்டியுள்ள நயன்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
தன்னுடைய உழைப்பு மற்றும் ஆற்றலை மட்டுமே நம்பி வெற்றி பெற்றவர் அவர். இவர் அழகி என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், அழகையும் தாண்டிய திறமை, திடம், அர்ப்பணிப்பு, துணிவு என இவை அனைத்துக்குமே இவரை உதாரணமாக சொல்லலாம்.
பல திறமைகள் படைத்த, நம் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ALSO READ: சிங்கிள் ஆக இருப்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை: நடிகை திரிசா ஓபன் டாக்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR