ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
Parari Movie Review: அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன் நடித்துள்ள பராரி படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
கலா பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் சார்பில் ஹரி சங்கர் தயாரித்துள்ள பராரி படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இந்த படத்தை இயக்கி உள்ளார். ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து உள்ளனர். பராரி படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். சாதிய ரீதியிலான மோதல்களை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது.
மேலும் படிக்க | தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கு இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்கள் சாலையின் ஒரு புறமும், மறுபுறமும் வாழ்ந்து வருகின்றனர். அதில் ஒரு குழுவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஹீரோ ஹரி அந்த மக்களில் ஒருவராக இருக்கிறார், மேலும் அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் மற்றொரு தரப்பிற்கும் இந்த தரப்பிற்கும் அடிக்கடி மோதல் வருகிறது. மேலும் ஹரி தங்களுக்கு தொடர்ந்து தொந்தரவாக இருப்பதாக மற்றொரு வகுப்பினர் எண்ணுகின்றனர். இதனால் ஹரிசங்கரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். அங்கு சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே பராரி படத்தின் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிசங்கர் இந்த படத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார் என்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. தன்னை ஏன் இப்படி செய்கின்றார் என்று வரும் கோபமும் ஆக்ரோஷமும் வார்த்தைகளால் இல்லாமல் முகத்தில் காட்டுகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் நீண்ட எதிர்காலம் உள்ளது. மறுபுறம் நாயகி சங்கீதமும் ஒரு சில இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் இருவருமே சிறப்பாக நடித்துள்ளார். மேலும் ஊர் தலைவர்களாக நடித்தவர்கள், கட்சிக்காரர்கள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களை தவிர குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்டோரும் நன்றாக நடித்துள்ளனர்.
பராரி இரண்டு வகையான சமூக மோதல்களை பற்றி பேசுகிறது. ஒன்று மொழியியல் பிரச்சனை மற்றொன்று சாதிய பிரச்சனை. தமிழ்நாட்டில் சாதியை வைத்து நாம் அடித்து கொண்டால், மற்றொரு மாநிலத்தில் நம்மை மொழியால் ஒதுக்குகிறான் என்பதை இயக்குனர் சொல்ல வருகிறார். படத்தின் இரண்டாம் பாதியில் கர்நாடகாவில் நடக்கும் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக காவிரி பிரச்சனையை கொண்டு வந்த விதம் நன்றாக இருந்தது. படம் இரண்டு முக்கிய பிரச்சனைகளை பற்றி பேசினாலும் இரண்டிலும் மேலோட்டமாக சொல்லி இருக்கின்றனர். வன்முறையை குறைத்து கொண்டு, திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பான படமாக அமைந்து இருக்கும் பராரி.
மேலும் படிக்க | தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ