சென்னை: நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்படும் பேரழிவு பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி ஒரு மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலக நடிகர் ஹரீஷ் கல்யாண் (Harish Kalyan), தான் தடுப்பூசி செலுத்திக்கொண்ட படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அனைவரும் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். 


அவர் தனது பதிவில், "என் முதல் கோவிட் தடுப்பூசி டோசை செலுத்திக்கொண்டேன்! யாரும் தயங்காதீர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள், முகக்கவசங்களை அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்! இந்த தொற்று சங்கிலியை நாம் உடைக்கலாம்! #TogetherWeCan." என்று எழுதியுள்ளார்.



ALSO READ: பிரியா பவானி சங்கர் மீது ஹரிஷ் கல்யாண் காதல்.. லவ் ட்வீட்டுக்கு பிரியாவின் ரியாக்‌ஷன் என்ன?


தமிழகத்தில் தடுப்பூசி செயல்முறையின் மூன்றாம் கட்டம் தொடங்கியதிலிருந்து, பல பிரபலங்கள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், சிம்ரன், அருண் விஜய், நயன்தாரா (Nayanthara), விக்னேஷ் சிவன், ஜீவா, காஜல் அகர்வால், சூரி, கவுதம் கார்த்திக், கல்யாணி பிரியதர்ஷன், அதிதி பாலன், டி.டி, சாக்ஷி அகர்வால், சஞ்சய் பாரதி பவித்ரலட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.


தடுப்பூசியை (Vaccine) செலுத்திக்கொள்ளும் பிரபலங்கள் இதை சமூக ஊடகங்களிலும் தெரிவித்து, புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு தடுப்பூசி குறித்த ஒரு விழிப்புணர்வு கிடடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை தெரிவிப்பதோடு, பிரபலங்கள், மக்களையும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திகிறார்கள்.


அவரது படங்கள் பற்றி பேசினால், ஹரீஷ் கல்யாண் தனது பியார் பிரேமா காதல் இயக்குனர் எலனுடன் ஒரு படத்திலும், சசியுடன் ஒரு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் நடித்த 'ஓ மணப்பெண்ணே' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தெலுங்கு படமான பெல்லி சூபுலு படத்தின் ரீமெக்காகும். கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.


வெள்ளியன்று தமிழ்நாட்டில் 36,184 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,70,988 ஐ எட்டியது. 


நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 467 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,598 ஆக உயர்ந்ததாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. நேற்று 24,478 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 14,76,761 ஆக உயர்ந்தது. 


ALSO READ: ரஜினி - கமல் கெட்டப்பில் தெறிக்கவிடும் ஹரிஷ் கல்யாண்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR