Viral ஆகும் ஈஸ்டர் போஸ்ட்: ரசிகர்களின் அன்பில் திளைக்கும் நயன், சிவன் ஜோடி

கோலிவுட்டின் மிகவும் நேசிக்கப்படும் ஜோடியான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிய இருவரும் 2021 ஏப்ரல் 5 ஆம் தேதி விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் கனக்கில் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு பதிவை இட்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2021, 04:18 PM IST
  • ரசிகர்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் நயந்தாரா ஜோடி.
  • விக்னேஷ் சிவன் பதிவுக்கு குவியும் லைக்குகள்.
  • ரசிகர்களின் கமெண்டுகளால் மகிழும் சிவன், நயன்.
Viral ஆகும் ஈஸ்டர் போஸ்ட்: ரசிகர்களின் அன்பில் திளைக்கும் நயன், சிவன் ஜோடி title=

சினிமா ரசிகர்களுக்கு பல நட்சத்திரங்கள் ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கோலிவுட்டின் மிகவும் நேசிக்கப்படும் ஜோடியான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிய இருவரும் 2021 ஏப்ரல் 5 ஆம் தேதி விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் கனக்கில் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு பதிவை இட்டனர். கறுப்பு நிற உடையணிந்த இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் பார்க்கும்படியான ஒரு படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதில் ”ஈஸ்டர் நாள்” ஒரு "இனிய நாளாக" இருந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர். 

இந்த பதிவிற்கு கமெண்ட் செக்‌ஷனில் ஏராளமான ரசிகர்கள் அன்பு நிறைந்த கமெண்டுகளை அளித்துள்ளனர். பல ஹார்டுகளையும் ஈமோஜிகளையும் பதிவிட்டு ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிக்காட்டியுள்ளனர். ஒரு ரசிகர், நயன்தாராவை (Nayanthara)  "மகிழ்ச்சியாக" பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார். அவர்களது இந்த படம் சில மணி நேரத்தில் 234,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ALSO READ: Kollywood: கார்த்தியின் சுல்தான் அதிரடி, கலெக்‌ஷன் கல்லா களை கட்டுகிறது

சமீபத்தில், இந்த ஜோடி விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு சூசகமான படத்தைப் பகிர்ந்தது. இதில், நயந்தாரா தனது இடது கையை விக்னேஷ் சிவனின் (Vignesh Sivan) மார்பில் வைத்திருப்பதும், அதில் அவரது பெரிய மோதிரமும் நன்றாகத் தெரிந்தது. இதனுடன் “விரலோடு உயிர் கூட கோர்த்து” என்ற வரிகளையும் சிவன் சேர்த்திருந்தார். இப்படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு இடையே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகி விட்டது என்ற வதந்தியும் பரவியது.  

மார்ச் 25 அன்று போஸ்ட் செய்யப்பட்ட இந்த படம் விரைவில் வைரலானது. இந்த படம் சுமார் 270,000 லைக்குகளைப் பெற்றது.

நயந்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது அன்பை வெளி உலகுக்குக் காட்ட என்றுமே அஞ்சியதோ, தயங்கியதோ இல்லை. பிப்ரவரி 14, 2021 அன்று காதலர் தினத்தன்று, சிவன் தனது காதலி நயன்தாராவுடன் பாரம்பரிய உடை அணிந்து ஒரு பதிவை பகிர்ந்தார். தன்னுடைய காதலை இந்த பதிவில் சிவன் அழகாக வெளிக்காட்டி இருந்தார். இந்த போஸ்டுக்கும் 390,000 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்தன.

ALSO READ: அஜய் தேவ்கனின் பிறந்த நாள் பரிசாக RRR Motion Poster

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News