இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி.எம்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதனை தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்  தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லெட்ஸ் கெட் மேரீட் (LGM) படம் , முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் தற்போது அமைந்துள்ளது. இந்த செகண்ட் லுக் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த செகண்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது, இதில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்க பிரதான பாத்திரங்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும் இந்த படத்தை இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.


மேலும் படிக்க | கேப்டன் மில்லர் லுக்கில் மும்பை சென்ற நடிகர் தனுஷ்..எதற்காக தெரியுமா?


அத்துடன் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். அண்மையில் தான் எல்.ஜி.எம். படக்குழு படப்பிடிப்பை முடித்து அதற்கான கொண்டாட்டத்தையும் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம் என தயாரிப்பு தரப்பு தெரிவிக்கின்றது.


இந்தப் படத்தை விகாஸ் ஹசிஜா தயாரிக்க பிரியான்ஷு சோப்ரா இதன் கிரியேடிவ் தயாரிப்பாளராக உள்ளார். தோனி என்டெர்டெய்ன்மென் ட் இந்தப் படத்தை வழங்குகிறது. முதல் படைப்பு என்றாலும் சரியான திட்டமிட்டலுடன் நேர்த்தியாக படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு குறித்து காலத்தில் படம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பதை படத் தயாரிப்புக் குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.


இந்நிலையில் தற்போது LGM திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக் குழு படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இது குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டரில் பக்கத்தில், “நம்ம எல்லோரோட ஃபேமிலியிலும் இருக்கிற லவ், ஃபன், எமோஷன், சண்ட, ரகளை இது எல்லாமே இந்த ஃபேமிலியிலும் இருக்குங்க” எனக் குறிப்பிட்டு படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் ஒன்றிணைந்த LGM திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு “டீசர் விரைவில்” வருகிறது என தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க | யாசகர்களுக்கு ஸ்டார் உணவகத்தில் விருந்து: விஜய் ஆண்டனிக்குக் குவியும் பாராட்டு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ