சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான யசோதா என்கிற சமந்தா, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். மாடலிங்கில் பயணத்தை தொடங்கிய அவருக்கு விரைவாகவே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியது. ரவி வர்மன் படத்தில் முதன் முதலாக லீட் ரோலில் நடிக்க அந்தப் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கரின் லூட்டி! ஹாஸ்டல் திரைவிமர்சனம்


இதனால் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’படத்தில் தமிழில் சிறிய ரோலில் நடித்த அவருக்கு, தெலுங்கில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாகசைதன்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்த சமந்தாவுக்கு, அந்தப் படம் சினிமா துறையில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதற்கு அடுத்து சமந்தாவின் திரைவாழ்க்கை ஏறுமுகம் தான். சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, நந்தி விருது என புகழ் மாலைகள் ஒவ்வொன்றாக கிடைக்க, அடுத்தாக தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் ஜோடி சேர்ந்து பிருந்தாவன் படத்தில் நடித்தார்.


இந்தப் படம் தெலுங்கில் சமந்தாவை முன்னணி நடிகையாக உயர்த்தியது. மகேஷ்பாபவுடன் துக்குடு, ராஜமௌலியின் ஈ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த சமந்தா, மீண்டும் கவுதம் வாசுதேவ் மேனனின் ’நீ தானே என் பொன்வசந்தம்’படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்தார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது போலவே, தமிழிலும் விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். விஜய்யுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார்.



இதற்கிடையே திருமண வாழ்க்கையில் இணைந்த அவருக்கு, அது கசப்பான அனுபவமாக அமைந்தது. பின்னர், மீண்டும் திரையில் கவனம் செலுத்திய அவர், ‘ஊ சொல்றியா மாமா’ மூலம் அகில உலக ஹிட் நடிகையாக மாறினார். இப்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தில் கதிஜாவாக அவதாரம் எடுத்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை மழையாக பொழிந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR