தீபாவளி ரேஸில் போட்டி போடும் 4 பெரிய தமிழ் படங்கள்! வெல்லப்போவது யார்?
Tamil Movies Diwali Releases 2024 : இந்த வருட தீபாவளிக்கு, சுமார் 4 படங்கள் ரிலீஸிற்கு தற்போது வரை ரெடியாக நிற்கின்றன. இதில், எந்த படம் வெற்றி பெரும்? இங்கு அது குறித்து பார்ப்போம்.
Tamil Movies Diwali Releases 2024 : வழக்கமாக, அனைத்து வருட தீபாவளிக்கும் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி வெளியாகும் படங்கள், பெரும்பாலான சமயங்களில் ரஜினி, விஜய், அஜித்துடையதாக இருக்கும். ஆனால், தற்போது அந்த ரேஸ் வேறு நடிகர்களின் பக்கம் திரும்பி விட்டது. இந்த நிலையில், தீபாவளி ரேஸில் தற்போது பங்கு பெற்றுள்ள நடிகர்கள் யார் யார் என்பதையும், எந்த படத்துடன் அவர்கள் போட்டி போட இருக்கின்றனர் என்பதையும் இங்கு பார்க்கலாமா?
அமரன்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அமரன். சில ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களை தழுவி, இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ‘மேஜர் முகுந்த்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படத்தின் டீசர், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் சிவாகர்த்திகேயன் புதுவிதமான டைலக்குகளை பேசி, ரசிர்களை கவர்ந்திருக்கிறார். இதனால், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். படம், தீபாவளியையொட்டி, வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகிறது.
விடாமுயற்சி:
லைகா நிறுவனம், இந்த படத்தின் டைட்டிலை அறிவித்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் இந்த படம் குறித்த பெரிய அப்டேட் எதுவுமே வெளியாகவில்லை. காரணம், படப்பிடிப்பில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதமானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அஜித்திற்கும் ஆரவ்விற்கும் விபத்து ஏற்பட்ட வீடியோ, அஜித்தின் படப்பிடிப்பு தள க்ளிக்ஸ் என அனைத்துமே வெளியாகி வைரலானது.
கடைசியாக துணிவு படத்தில் நடித்த அஜித், அடுத்து மகிழ் திருமேனியுடன் சேர்ந்து விடாமுயற்சி படத்திற்காக கைக்கோர்த்தார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், போகிற போக்கை பார்த்தால் இப்படம் அடுத்த வருட பொங்கலுக்குதான் வெளியாகும் என திரை வட்டாரத்தினர் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | சந்திரமுகி to பிகில்…தீபாவளியன்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தமிழ் படங்கள்!
பிரதர்:
சமீப காலமாக, பெரும் சர்ச்சையில் சிக்கி இப்போது இரண்டு படங்களில் கமிட் ஆகி இருப்பவர், ஜெயம் ரவி. இவர் நடித்திருக்கும் படம் பிரதர். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார்.
இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம், நகைச்சுவை-குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம், வரும் மாதம் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ப்ளடி பெக்கர்:
இயக்குநராக இருந்து, இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருப்பவர், நெல்சன் திலீப்குமார். இவர், முதன் முதலாக நடிகர் கவின் நடிக்கும் படத்தை தயாரித்திருக்கிருக்கிறார். இந்த படத்தின் பெயர், ப்ளடி பெக்கர். இதனை, புதுமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படமும், தீபாவளியை ஒட்டி அடுத்த மாதம் 31ஆம் தேதி வெளியாகிறது.
ஜெயிக்கப்போவது யார்?
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ், அநேகமாக தள்ளிப்போகலாம். எனவே போட்டிக்கு இப்போது அமரன், பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர் ஆகிய படங்களே இருக்கின்றன. இதில், எந்த படம் முந்தப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | இந்த வாரம் ஒரே நாளில் வெளியாகும் 6 பெரிய திரைப்படங்கள்! எதை முதலில் பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ