சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் இன்று முதல் உங்கள் வீட்டுத் திரையில்! அமேசான் ப்ரைம் வெளியீடு
Jailer OTT Release Today: செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஜெயிலர் படத்தை பார்க்கலாம். ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியானது
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை எப்போது வீட்டி லிருந்தபடியே பார்த்து ரசிக்கலாம் என ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. இன்று முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஜெயிலர் படத்தை பார்த்து ரசிக்கலாம்.
ஓடிடி வெளியீடு
ஜெயிலர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து படம் வெளியான போதே தகவல்கள் வெளியானது. இதையடுத்து அமேசான் ப்ரைம் தளம் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது.
தமிழ் திரையுலகின் ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்டு மாதம் வெளியான படம், ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், திரையுலகை சேர்ந்த பல பிரபல நடிகர் நடிகைகள் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்திருந்தனர்.
மேலும் படிக்க | வனிதா to ஷ்ருத்திகா..தொழில் அதிபர்களாக வலம் வரும் சின்னத்திரை பிரபலங்கள்!
கம்-பேக் கொடுத்த ரஜினி-நெல்சன் ஜோடி
கோலமாகவு கோகிலா, டாக்டர் என சில படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் நெல்சன் திலீப்குமார். இவர், சில படங்களையே இயக்கி இருந்தாலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில் இணைந்து, ரஜினிகாந்தை ஹீரோவாக நடிக்க வைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
சன் பிக்சர்ஸ்:
ஜெயிலர் திரைப்படத்தினை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 240 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூலே 60 கோடியை தாண்டியது. படம் வெளியாகி பல நாட்களான நிலையில், படத்தின் வசூல் தற்போது 600 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஜெயிலர் படத்தை பார்க்கலாம் என்று தெரிவித்தாலும், ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியிடப்படும் முடிவுக்கு வர்த்தக ரீதியாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவிற்கு பதில் ‘இந்த’ நடிகை இடம்பெற இருந்தாரா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ