ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது!
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
டெர்மினேட்டர் படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் அர்னால்ட். இவரின் முழுபெயர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், பாடி பில்டிங்கில் உலக சாதனை படைத்த இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்று வரையில் அதிக அளவில் உடற்பயிற்சி கூடங்களில் பெயர் அர்னால்ட் என்ற உள்ளது. ஷங்கர் - விக்ரம் (actor Vikram) கூட்டணியில் உருவான ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்திருந்தார் அர்னால்ட்.
ALSO READ | கெளதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?
இந்நிலையில் ப்ரன்ட்வுட் பகுதியில் அர்னால்டு சென்ற கார் (Car Accident) விபத்துக்குள்ளாகியுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது அர்னால்டின் கார் மோதி உள்ளது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இருந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அர்னால்டிர்க்கு சிறிது காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தெரிவித்த காவல்துறை அர்னால்டு மீது தவறு உள்ளது என்றும் இடது பக்கம் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னராக இருந்த அர்னால்ட் நடிப்பில் கடைசியாக 2019ஆம் ஆண்டு டெர்மினேட்டர் டார்க்பேட் என்ற திரைப்படம் வெளியானது. மேலும் குங் ப்யூரி 2 என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளிவர உள்ளது.
ALSO READ | ஏஆர்.ரகுமானுக்கு இனி மியூசிக் இன்ஸ்ட்ருமென்டே தேவையில்லை... ஏன்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR